ஆல்-ரவுண்டராக’ சாதிப்பேன்: சாவ்லா நம்பிக்கை

“தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் “டுவென்டி-20′ தொடரில் சிறந்த “ஆல்-ரவுண்டராக’ சாதிப்பேன்,” என, இந்திய சுழற்பந்துவீச்சாளர் பியுஸ் சாவ்லா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி ஒரு “டுவென்டி-20′ மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இதற்கான வீரர்களை இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சமீபத்தில் அறிவித்தது. இதில் இரண்டு ஆண்டுகளுக்கு பின், சுழற்பந்துவீச்சாளர் பியுஸ் சாவ்லா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் கடைசியாக கடந்த 2008ல் பாகிஸ்தானுக்கு எதிராக கராச்சியில் நடந்த ஒருநாள் போட்டியில் விளையாடினார்.
இதுகுறித்து பியுஸ் சாவ்லா கூறியதாவது: இரண்டு ஆண்டுகளுக்கு பின் இந்திய அணியில் இடம் கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்திய அணியில் “ஆல்-ரவுண்டருக்கான’ இடம் காலியாக உள்ளது. எனவே தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் “டுவென்டி-20′ தொடரில் சிறந்த “ஆல்-ரவுண்டராக’ ஜொலித்து, அணியில் நிரந்தர இடம் பிடிப்பேன். ரஞ்சி கோப்பை தொடரில் சிறப்பாக பந்துவீசியதன் காரணமாக என்னை தேர்வு செய்துள்ளனர். எனவே பந்துவீச்சில் அதிக கவனம் செலுத்துவேன். பேட்டிங்கில் 7 அல்லது 8வது வீரராக களமிறங்கும் பட்சத்தில் 30-40 ரன்கள் எடுத்து அணிக்கு கைகொடுப்பேன். இதன்மூலம் அணியில் எனது இடத்தை உறுதி செய்து கொள்ளலாம்.
சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான buy Lasix online பயிற்சி போட்டி, இரானி கோப்பை உள்ளிட்ட தொடர்களில் சிறப்பாக விளையாடினேன். தற்போது நடக்கும் ரஞ்சி கோப்பை தொடரிலும் உத்தர பிரதேச அணிக்காக பேட்டிங், பவுலிங்கில் முழுதிறமையை வெளிப்படுத்தினேன். இதன்மூலம் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள உலக கோப்பை தொடருக்கான உத்தேச அணியில் இடம் பிடித்தேன். தென் ஆப்ரிக்க தொடரில் திறமையை நிரூபிக்கும் பட்சத்தில், உலக கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட அணியில் இடம் பிடிக்க வாய்ப்பு உள்ளது. எனவே இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்வேன்.
இவ்வாறு பியுஸ் சாவ்லா கூறினார்.

Add Comment