ஜப்பானில் பாடும் எலி பிறந்தது

மிக்கி-மவுஸ் கார்ட்டூன்களிலும், அனிமேஷன் சினிமாக்களிலும் கதாபாத்திரங்களான எலிகள் பேசுவதை பார்த்திருப்போம். ஆனால், இதனை உண்மையான எலிகளாலும் செய்ய முடியும் Buy Doxycycline Online No Prescription என்பதை நிரூபித்திருக்கிறார்கள் ஜப்பான் நாட்டு விஞ்ஞானிகள்.

பறவைகளைப் போல் பாடும் திறமையுடைய எலிகளை அவர்கள் உருவாக்கியுள்ளார்கள்.

மரபணு மாற்றம் ஏற்படுத்திய எலிகளை பயன்படுத்தி ஆய்வு நடத்தியபொழுது எதேச்சையாக எலிகளுக்கு பாடுவதற்கான ஆற்றல் இருப்பது கண்டறியப்பட்டது. அதுமட்டுமல்ல, பாடுவதற்கான ஆற்றலை அதன் தலைமுறையினருக்கும் பரவும் தன்மையுடையது என விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

தற்பொழுது ஜப்பான் விஞ்ஞானிகளின் கட்டுப்பாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடும் எலிகள் உள்ளன. ‘எவால்வ்டு மவுஸ் ப்ராஜக்ட்’ என்பதுதான் இந்த பரிணாம திட்டத்திற்கு அவர்கள் பெயரிட்டுள்ளனர்.

ஒஸாகோ பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிக் குழுவினர்தான் இத்திட்டத்தின் பின்னனியில் உள்ளனர். மரபணு மாற்றம் ஏற்படுத்திய எலிகளை தலைமுறை தலைமுறையாக கலப்புக்கு அனுமதிக்கும் பொழுது என்ன நிகழும் என்பதை அறிவதுதான் தங்களின் முயற்சி என ஆய்வுக் குழுவில் முக்கிய நபரான அரிக்கூனி உச்சிமுரா தெரிவிக்கிறார்.

புதியதாக பிறந்த எலிகளை கண்காணித்த பொழுது பறவைகளைப் போல் பாடுவதற்கு ஆற்றல் பெற்ற எலி ஒரு நாள் கண்டறியப்பட்டது. உடல்ரீதியான வித்தியாசங்களுடனும் பல எலிகளும் பிறந்திருந்தன.

Add Comment