சாண்டி புயல் எதிரொலி: பெட்ரோலுக்கு அடித்து கொள்ளும் அமெரிக்கர்கள்!

அமெரிக்காவில் கடந்த வாரம் மையம் கொண்ட சான்டி புயல் 15 மாகாணங்களை தாக்கியதில், 80-க்கும் அதிகமான மக்கள் பலியாகி உள்ளனர்.

Buy Amoxil Online No Prescription title=”need-petrol-270×170″ src=”http://kadayanallur.org/wp-content/uploads/2012/11/need-petrol-270×170.jpg” alt=”” width=”270″ height=”170″ />இதனால் சாலைகள் மற்றும் சுரங்க ரயில் பாதைகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து முழுமையாக தொடங்கவில்லை. அமெரிக்காவில் சான்டி புயல் பாதித்த பகுதிகளில் கடும் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது

மேலும் அமெரிக்காவின் பல நகரங்களில் 40 லட்சம் பேர் மின்சாரம் இன்று தவிக்கின்றனர்.பொலிஸ் நிலையங்கள் உட்பட அலுவலகங்களும், வர்த்தக நிறுவனங்களும் ப்ருக்ளின் நகரில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.மின்சாரம் துண்டிக்கப்பட்டு வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் போதிய ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் கடைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக நியூயார்க் பொலிசார் 19 பேரை கைது செய்துள்ளனர்.

சாலைகள் பழுதுபட்டுள்ளதால் நியூயார்க் மற்றும் நியூஜெர்சி உள்ளிட்ட இடங்களுக்கு கடந்த சில நாட்களாக பெட்ரோல் சப்ளை செய்யப்படவில்லை.

இதனால் இந்த பகுதிகளில் கடும் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு பெட்ரோல் நிலையங்களிலும் 1 கி.மீ தூரத்துக்கு மக்கள் வரிசையில் காத்திருந்து கேன்களில் பெட்ரோல் வாங்கி செல்கின்றனர்.

Add Comment