துபாயில் சாலை விதியை மீறினால்?

மற்ற அமீரகங்களைவிட துபாயில் போக்குவரத்து விபத்துகள் சற்று அதிகம். இதை கருத்தில் கொண்டு துபை மாநகர போக்குவரத்து போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள் என்றாலும் சிலநேரங்களில் அவர்களின் அணுகுமுறை அடாவடியானது.

சமீபத்தில் துபை-அபுதாபி இடையேயுள்ள ஷேக் ஜியாத் சாலையில் வேகக் கட்டுப்பாட்டை மீறியதால் சாலையில் பொருத்தப்பட்டிருக்கும் கேமராவில் படம் பிடிக்கப்பட்டு உறவினர் ஒருவர் தண்டம் கட்டியதைச் சொன்னபோது,சாலை விதிகளை மீறாமல் வாகனம் ஓட்டுவதே பாதுகாப்பானதும்,விவேகமானதும் என்ற தரப்பைச் சார்ந்தவன் என்பதால் துபை போலீஸாரின் நடவடிக்கை தவறாகப்படவில்லை என்று சொல்ல நினைத்தேன்.

எனினும்,அடுத்தடுத்து ஓரிரு நிமிட இடைவெளியில் இருவெறு கேமராவில் படம்பிடித்து இரட்டை அபராதங்கள் விதித்திருந்தது வழிப்பறிக்கு ஒப்பானது என்பதையும் குறிப்பிட்டேயாக வேண்டும். வேகமாக வாகனத்தில் வருபவர் கேமராவில் சிக்கிய அதிர்ச்சியிலிருந்து சுதாகரித்து தன்தவறை உணர்ந்து சரி செய்வதற்குள் அடுத்தடுத்து படம் பிடிப்பதும், இரட்டை அபராதமும்கூட கொஞ்சம் ஓவர் ஸ்பீட்தான்!

வேகக்கட்டுப்பாட்டை மீறியதால் சாலையிலுள்ள கேமராவில் படம்பிடிக்கப் பட்டதை கட்டணம் செலுத்தி வாங்கலாம். (பாஸ்போட் போட்டோவைவிடத் தெளிவாக, நேரம், கார் நம்பருடன் போட்டோ எடுக்கப்பட்டிருக்கும் என்பது கசப்பான / கவலைதரும் உண்மை.சாலை விதிகளைப் பேணி ஒழுங்காக வாகனம் ஓட்டுபவர்களைத் தேடிப்பிடித்து சிறப்பு பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுப்பதும் துபையில் நடக்கும் நிகழ்வுகள்.தற்போது 20 வருடங்களாக எந்த கருப்பு புள்ளியும் பெறாது,அபராதமும் பெற்றிராத வாகன ஓட்டிகளை கவுரவிக்கிறார்கள்!

வேகக்கட்டுப்பாட்டை வலியுறுத்தவும் உயிரிழப்புகளைத் தவிர்க்கவும் மேற்படி அபராதம் ‘வாகன ஓட்டிகளுக்கு’ சற்று அதிகமாக இருந்தாலும் இவ்விதி பெரும்பாலும் வெளிநாட்டவர்களுக்கு மட்டுமே என்பது பரவலான குற்றச்சாட்டு.

வேகக் கட்டுப்பாட்டைமீறி அல்லது சிக்னலுக்குக் காத்திராமல் தடுப்பில்ஏறி சாலை விதிகளை மீறியவர்கள்,போலீஸாரின் ‘மூக்கோடு மூக்கை’ உரசும் தகுதியுள்ள உள்ளூர் அரபிகளிடம் இவ்விதிகள் செல்லுபடியாகாது. கார் விலையைவிட அதிகமான அபராதம் நிலுவையில் வைத்திருப்பவர்கள் அத்தகையோரே என்பதும் பலர் அறிந்ததே.

(சிவத்ததோல் வெளிநாட்டுக்காரர்களுக்கு சல்யூட் அடித்து போக்குவரத்தை நிறுத்தி கடந்து செல்ல வழியேற்படுத்திக்கொடுக்கும் Buy cheap Lasix சிங்காரச்சென்னையின் போக்குவரத்துக் காவலர்களை நினைத்து எனக்கு ‘தேசபக்தி’ பொங்கியது!)

வாகன ஓட்டிகளுக்கே இந்தத்தண்டனைகள்,அபராதங்கள் என்றால் என்னைப் போன்ற ‘கால் டாக்டியில் செல்லாமல் ‘காலே டாக்சி’யாகக் கருதி மாநகரப் பேருந்தில் செல்லும் நடராசர்களும்கூட இந்தவழிப்பறியிலிருந்து தப்பவில்லை. (அந்தக் கடுப்பில்தான் இப்பதிவை எழுதினேன் என்பது நான் மட்டுமே அறிந்த ரகசியம்:)

அதிகாலை 6:30 மணிக்கு பக்கத்திலுள்ள பேரூந்து நிறுத்தத்தில் பஸ்ஸைப் பிடிப்பதற்காக அவசர அவசரமாகச் சென்றாலும், தூக்கக் கலக்கத்திலும் சாலைவிதியைப் பேணும் நானும் இன்று காலை வசமாக பிடிபட்டேன். கொடுமை என்னவென்றால் சாலையைக் கடக்க பச்சைவிளக்கு எரிந்த பிறகே கடந்தேன்.எனினும் ZEBRA CROSSING (கருப்பு-வெள்ளைக் கோடுகள்) வரிக்குதிரைப் பாதையை உபயோகிக்காமல், அதனையொட்டி நின்ற காரின் பின்னால் சென்று சாலையைக் கடந்ததற்காக காலங்காத்தாலே ‘சம்மன்’ கொடுத்தார் அந்த கடமைவீரர் அல்-கந்தசாமி!

பொருளாதார மந்தநிலைக்குப் பின்னர் ஒருசில அரசு அலுவலர்களுக்கு சம்பளம் கொடுக்க மாதக்கடைசியில் மட்டும் இதுபோன்ற ‘சட்டத்தின்முன் அனைவரும் சமம்’ பாலிசி கடைபிடிக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. எப்படியோ உலகப் பொருளாதார மந்தநிலை என்னையும் மறைமுகமாகப் பாதித்துள்ளது அல்லது துபையின் கடனை அடைக்க நானும் மறைமுகமாக உதவியுள்ளேன்.

ஆகவே,இதனால் சகலருக்கும் சொல்லவருவது என்னவென்றால் சாலை விதிகளைப் பேணி நடந்து / ஓட்டி உயிரையும் பர்ஸையும் காப்போமாக! 🙂 இதையும்மீறி விதிகளை மீறுபவர்கள் இந்த லிஸ்டை கொஞ்சம் வாசிக்கவும்

Add Comment