தாழ்வாக பறந்த ஹெலிகாப்டரால் வேடசந்தூர் அருகே பரபரப்பு

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தாழ்வாக பறந்த ஹெலிகாப்டரால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ளது அம்மாப்பட்டி கிராமம். இங்கு இன்று காலையில் ஒரு ஹெலிகாப்டர் மிகவும் தாழ்வாக பறந்து வந்தது. இதைப் பார்த்து பொதுமக்கள் திடுக்கிட்டனர்.

மிகவும் தாழ்வாக வந்த அந்த ஹெலிகாப்டர் அங்குள்ள தென்னந்தோப்புகளின் மீது, தென்னை மரங்களை உரசிக் கொண்டு சென்றது. தொடர்ந்து அது தாழ்வாக அங்குமிங்கும் பறந்ததால் கிராம மக்கள் பீதியடைந்தனர். பின்னர் அந்த ஹெலிகாப்டர் போய் விட்டது.

இதுகுறித்து buy Cialis online போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. எந்திரக்கோளாறு ஏற்பட்டு அதை சமாளிக்க முடியாமல் ஹெலிகாப்டரின் பைலட் திணறியிருக்கலாம், பின்னர் சமாளித்து மேலே போயிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

Add Comment