உலகக்கோப்பையை இந்தியா வெல்லும்-கங்கூலி நம்பிக்கை

2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெரும் என்று முன்னாள் கேப்டன் சௌரவ் கங்கூலி தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் தோற்றது ஏமாற்றமாக இருந்தது என்றாலும் அந்த அணி மீண்டும் வெகுண்டு எழுந்து சிறப்பாக விளையாடும் இதன் மூலம் வெற்றி வாய்ப்பு ஏற்படும் என்றும் கங்கூலி தெரிவித்துள்ளார்.

அணியில் எந்த வீரரும் தோல்விபெறுவதற்காக விளையாடுவதில்லை, வெற்றிக்காகவே அனைவரும் விளையாடுகின்றனர். Viagra No Prescription இருப்பினும் சில நேரங்களில் தோல்வி தவிர்க்கமுடியாததாகி விடுகிறது.

கிரிக்கெட்டில் அனைத்தும் ஒரேவிதமாகச் செல்லும் என்று கூற முடியாது. இரண்டு மணி நேர ஆட்டத்தில் எதுவேண்டுமானாலும் மாறலாம் எனவே வெற்றி வாய்ப்பு இந்தியாவுக்கு உண்டு என்றார் கங்கூலி.

அதேபோல் இந்திய மண்ணில் உலகக் கோப்பை கிரிக்கெட் நடைபெறுவதாலும் தற்போது இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட்டில் பலமாகத் திகழ்கிறது என்பதாலும் இந்திய அணிக்குத்தான் உலகக் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளது என்று சௌரவ் கங்கூலி தெரிவித்துள்ளார்.

Add Comment