பால் தாக்கரே காலமானார்:மும்பையில் பலத்த பாதுகாப்பு.

Lasix No Prescription class=”alignleft size-full wp-image-32163″ title=”thackry” src=”http://kadayanallur.org/wp-content/uploads/2012/11/thackry.jpg” alt=”” width=”300″ height=”157″ />சிவசேனா கட்சித் தலைவர் பால் தாக்கரே 17.11.2012 சனிக்கிழமை மாலை 3.30 மணி அளவில் காலமானார். 86 வயதான பால்தாக்கரே கடந்த ஒரு மாதமாக உடல்நிலை குறைவு காரணமாக வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில நாட்களாக அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.

இருந்த போதிலும் ,அவர் நல்ல உள்ளார் என்று காட்டுவதற்காக அவர் பெயரில் பத்திரிக்கைகள் அறிக்கைகளை வெளியிட்டு வந்தன .

பால்தாக்கரேவின் வீட்டை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிவசேனா கட்சியின் முக்கிய தலைவர்கள் அவரது வீட்டில் குவிந்துள்ளனர். மும்பையில் ரயில் நிலையங்கள் உட்பட பல இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

18.11.2012 காலை 10 மணிக்கு இறுதி ஊர்வலம் புறப்படுகிறது. மாலை 3 அளவில் பால்தாக்கரேவின் உடல் அடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment