காலரா நோயை பரப்பியதாக குற்றஞ்சாட்டி 45 பேர் ஹைத்தியில் அடித்துக் கொலை

ஹைத்தியில் காலரா நோயை பரப்பியதாக குற்றஞ்சாட்டி கடந்த ஒரு வாரத்திற்கிடையே 45 பேர் பொதுமக்களால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர்.

மந்திரவாதம், அமானுஷ்யம் போன்றவற்றில் நம்பிக்கைக் கொண்ட ஆப்பிரிக்க மதபிரிவுதான் உடூன். பாரம்பரியமிக்க இந்த மந்திரவாதிகள் மாந்திரீக சக்தியை பயன்படுத்தி இவர்கள் காலராவை பரப்பியதாகக் கூறித்தான் பொதுமக்கள் இவர்களை அடித்துக் கொன்றுள்ளனர்.

இத்தகையதொரு தாக்குதல்களை தடுத்து நிறுத்தவும், காலரா பரவுவதை தடுத்து நிறுத்துவது என்பதனைக் குறித்து பொதுமக்களை விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஹைத்தி செய்தித்தொடர்பு அமைச்சர் அழைப்புவிடுத்துள்ளார்.

காலரா மூலம் ஹைத்தியில் கடந்த அக்டோபர் முதல் 25 ஆயிரம் பேர் மரணித்துள்ளனர். ஒன்றேகால் லட்சம்பேர் சிகிட்சைப் பெற்றுள்ளனர்.

இந்த பரவும் நோயைக் online pharmacy no prescription குறித்து ஐ.நா அமைதிப் படையினருக்கு எதிராகவும் எதிர்ப்புக் கிளம்பியிருந்தது. நேபாளிலிருந்து வந்த படையினர்தான் இந்நோயை பரப்பியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

ஹைத்தியில் ஒரு பிரதேசத்தில் மட்டும் 40 பேரை பொதுமக்கள் அடித்துக் கொன்றுள்ளனர். இதில் பெரும்பாலானோர் உடூன் மந்திரவாதிகளாவர். ஐந்துபேர் இதர பகுதிகளில் கொல்லப்பட்டனர்.

கல்வீசியோ,வெட்டியோ கொன்ற பிறகு அவர்களை தீவைத்துக் கொளுத்தியுள்ளனர். தாக்குதலை தடுக்க போலீஸ் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என உடூன் மந்திரவாதியான மாக்ஸ் பிவோயிர் தெரிவிக்கிறார்.

முன்னர் பூகம்பம் ஹைத்தியை தாக்கிய பொழுது பொதுமக்களின் கோபம் உடூன் மந்திரவாதிகளுக்கு எதிராக கிளம்பியிருந்தது.

Add Comment