இரவு நேரத்தில் சக நட்புகளுடன் சாட்டிங் யில் ஈடுபடக் கூடியவர்களா நீங்கள்…?

இரவு நேரத்தில்
சக நட்புகளுடன் சாட்டிங் யில்
ஈடுபடக் கூடியவர்களா….? நீங்கள்…?
அதிகம் கவனம் தேவை
ஏனெனில்
பகலில் நம்முடன் இருக்கும் ஷைத்தானின் சேட்டை களை விட..
இரவில் நம்முடன் இருக்கும் ஷைத்தானின்
தீய வழி காட்டல் தான் நம்மை அதிகம் வழி கெடுக்கிறது..
நம்முடைய ஈமானை பாழ்படுத்துகிறது ..

பகலில் நம்முடன் நல்லமுறையில் பேசக் கூடிய
நட்புகளில் சிலர்
இரவு நேரத்தில் அவர்களின் பேச்சுக்களின் தன்மை மாறி விடுகிறது..
இதில் ஆண்களும் அடங்குவர்
பெண்களும் அடங்குவர்

குழைந்து பேசுவது
ஆபாசமாக பேசுவது…
இப்படி படிப்படியாக முன்னேறி ..
அந்தரங்கள் , ஆபாசங்களின் பேச்சுக்கு
அடிமையாகி ..
காலப் போக்கில்
தொற்று வியாதி போல சக நட்புகளையும்
இதில் விழ வைக்கக் கூடிய
கேவலமான சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள்..

இரவு 10:00 மணியைக் கடந்து விட்டாலே..

“”””தூக்கம் வரலியா…”””””

என்ற பேச்சைத் தொடங்கி….ஆபாச பேச்சுக்கு வித்திட ஆரம்பிப்பார்கள்…
அப்போதே..அவர்களுடன் பேச்சைத் துண்டித்து விடுவதுடன்
அவர்களை நட்பு Buy Amoxil Online No Prescription வட்டத்தில் இருந்து தூக்கி விடுவதுதான்
நம்முடைய ஈமானை
பாதுகாத்துக் கொள்ளும் ஒரே வழி
என்பதை கவனத்தில் கொள்க!

நாமறிந்தவரை
இதில் ஆண்களை விட பெண்கள் தான்
அதிகம் பலிகிடாவாக ஆக்கப்படுகிறார்கள்..
ஆபாச பிரியர்களே
அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்…
உங்கள் மூலமாக யார் யாரெல்லாம் வழி கெடுக்கப் படுகிறார்களோ..
அவர்களின் பாவங்களில் ஒரு பங்கையும் நீங்கள் சேர்த்து அனுபவிப்பீர்கள்…

கவனம்:- முடிந்தளவு இரவு 10:00 மணிக்கு மேல் யாரும், யாருக்கும் சாட்டிங் செய்வதை தவிர்ந்து கொள்ளவும்!!

يُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَيُسَارِعُونَ فِي الْخَيْرَاتِ وَأُولَٰئِكَ مِنَ الصَّالِحِينَ

3:114. அவர்கள் அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்கிறார்கள்; நல்லதை(ச் செய்ய) ஏவுகிறார்கள் தீமையை விட்டும் விலக்குகிறார்கள். மேலும், நன்மை செய்வதற்கு விரைகின்றனர்; இவர்களே ஸாலிஹான (நல்லடியார்களில்) நின்று முள்ளவர்கள்.

يَوْمَ تَجِدُ كُلُّ نَفْسٍ مَّا عَمِلَتْ مِنْ خَيْرٍ مُّحْضَرًا وَمَا عَمِلَتْ مِن سُوءٍ تَوَدُّ لَوْ أَنَّ بَيْنَهَا وَبَيْنَهُ أَمَدًا بَعِيدًا ۗ وَيُحَذِّرُكُمُ اللَّهُ نَفْسَهُ ۗ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ

3:30. ஒவ்வோர் ஆத்மாவும், தான் செய்த நன்மைகளும்; இன்னும், தான் செய்த தீமைகளும் அந்த(த் தீர்ப்பு) நாளில் தன் முன்கொண்டு வரப்பட்டதும், அது தான் செய்த தீமைக்கும் தனக்கும் இடையே வெகு தூரம் இருக்க வேண்டுமே என்று விரும்பும்; அல்லாஹ் தன்னைப்பற்றி நினைவு கூறுமாறு உங்களை எச்சரிக்கின்றான்; இன்னும் அல்லாஹ் தன் அடியார்கள் மீது கருணை உடையோனாக இருக்கின்றான்.

Add Comment