சைவ உணவு சாப்பிடுபவர்கள் எல்லாம் பொய் சொல்லுவார்களாம் !

மட்டன், சிக்கன் போன்ற அசைவ உணவு சாப்பிடுபவர்கள் எல்லாம் பொய் சொல்லுவார்கள், ஏமாற்றுவார்கள், செக்ஸ் குற்றங்களில் அதிகம் ஈடுபடுவார்கள் என்று 6 ம் வகுப்பு சி.பி.எஸ்.சி பாடப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது…

6ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் ‘நியூ ஹெல்த்திவே’ என்ற பெயரில் உள்ள பாடத்தில் ஹெல்த், ஹைஜீன், பிசியாலஜி, பாதுகாப்பு, பாலியல் கல்வி, விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவை பற்றி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதில்தான் அசைவ உணவு சாப்பிடுபவர்கள் எளிதில் ஏமாற்றுவார்கள், பொய் கூறுவார்கள், கொடுத்த வாக்கை காப்பாற்ற மாட்டார்கள், நாணயம் தவறிவிடுவார்கள், கெட்ட வார்த்தை பேசுவார்கள், வன்முறையாளர்களாக இருப்பார்கள், செக்ஸ் குற்றங்களில் அதிகம் ஈடுபடுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

online pharmacy no prescription style=”text-align: justify;”>9ம் வகுப்பு சி.பி.எஸ்.சி பாடப்புத்தகத்தில் நாடார்களைப் பற்றி கூறப்பட்டுள்ள சர்ச்சையே இன்னும் ஓய்ந்த பாடில்லை.

அதற்குள் இப்படி ஒரு தகவல்…

பாடதிட்டம் இயற்றும் பெறியோர்களே..நீங்கள் ஏன் வெறியர்களாக செயல்படுகிறீர்கள் என்பது புறியவில்லை..

பாடதிட்டம் என்பது கல்வியை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும்..மக்களை மடையர்களாக மாற்றக்கூடாது என்பதை நினைவில் வைத்துகொண்டு செயல்படுங்கள்…

மாமிசம் சாப்பிடுவதால் மட்டும் மனிதன் குற்றங்கள் புறிவதில்லை..இதன் சம்பந்தமாக மனோதத்துவ நிபுணர்களிடம் ஆலோசனை செய்துவிட்டு ..அல்லது குற்றம் புரிபவர்களையே சர்வே செய்து உண்மையான கல்வியை உலகிற்கு வழங்குங்கள்…

Add Comment