சென்னையில் தரையிறங்கியபோது டயர் வெடித்து பயங்கர விபத்து 155 பேர் உயிர்தப்பினர்!

மஸ்கட்டில் Levitra online இருந்து இன்று காலை 11.45 மணிக்கு 146 பயணிகள், 9 விமான சிப்பந்திகளுடன் சென்னை வந்த ஓமன் எயர்லைன்ஸ் விமானம் ஓடுபாதையில் தரையிறங்கி டேக்ஸி வேயில் வந்து கொண்டிருந்த போது முன்பக்க டயர் திடீரென வெடித்தது. இதனால் விமானம் பயங்கரமாக குலுங்கியது.

விமானத்துக்குள் இருந்த பயணிகள் அலறி கூச்சலிட்டனர். குண்டு வெடித்தது போன்று சத்தம் கேட்டதால் அங்கு நின்றிருந்த பாதுகாப்பு அதிகாரிகள், சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆனால் விமானி மிகவும் சாமர்த்தியமாக செயல்பட்டு விமானத்தை பத்திரமாக நிறுத்தினார். இதனால் விமானத்தில் இருந்த 155 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பின்னர் பயணிகள் பத்திரமாக கீழே இறக்கப்பட்டனர்.

விமானத்தை ஒதுக்குப் புறமான இடத்தில் நிறுத்தி பழுதான டயரை மாற்றியமைக்கும் பணியில் விமான பொறியாளர்கள் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இந்த விமானம் வழக்கமாக காலை 10 மணிக்கு வந்து விட்டு 11 மணிக்கே புறப்பட்டு சென்று விடும். இதே விமானத்தில் சென்னையில் இருந்து மஸ்கட் செல்ல 185 பயணிகள் காத்திருந்தனர். விமானம் பழுதடைந்ததால் இன்று இரவு 11 மணிக்குத்தான் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment