அணு குண்டை வைத்து நிலவை தகர்க்க திட்டமிட்ட அமெரிக்கா- அதிர்ச்சி தகவல்

Buy Bactrim src=”http://kadayanallur.org/wp-content/uploads/2012/11/america-300×168.jpg” alt=”” width=”300″ height=”168″ />அணு குண்டை வைத்து நிலவை தகர்த்த திட்டமிட்ட அமெரிக்கா: அதிர்ச்சி தகவல் வெளியானது 1950ஆம் ஆண்டுகளில் நிலவை அணு குண்டு வைத்து தகர்க்க அமெரிக்கா திட்டம் தீட்டியது தற்போது தெரியவந்துள்ளது.

இது குறித்து தி டெய்லி மெயில் பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்தியில்,1950ஆம் ஆண்டுகளில் நிலவை அணு குண்டு வைத்து தகர்க்க ‘புராஜெக்ட் ஏ119′ என்ற திட்டத்தை அமெரிக்கா தீட்டியது.

மேலும் பெயர் வெளியிடப்படாத இடத்தில் இருந்து சிறிய அணு குண்டை நிலவுக்கு அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டிருந்தது.

ஹைட்ரஜன் குண்டை விண்கலத்தில் அனுப்பினால் அது மிகவும் கனமாக இருக்கும் என்பதால் அணு குண்டை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.

ஆனால் இந்த திட்டம் தோல்வி அடைந்தால் பூமியில் உள்ள மக்களுக்கு ஏற்படும் விபரீதங்களை கருத்தில் கொண்டு இராணுவ அதிகாரிகள் இம்முயற்சியைக் கைவிட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சோவியத் யூனியன் ஸ்புட்னிக் என்ற விண்கலத்தை அனுப்பியதால் ஆத்திரமடைந்தே இந்தத் திட்டத்தைத் தீட்டியதாகவும், சோவியத் யூனியனை விட தானே வலிமையானவன் என்பதை நிரூபிக்கவும் இந்த திட்டத்தை தீட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment