ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிக்கு தமிழக அணி முன்னேறியது.

ரஞ்சி கோப்பை சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரின் காலிறுதிப் போட்டிகள் நாட்டின் முக்கிய நகரங்களில் நடந்தது. அரியானா மாநிலம் ரோக்தக் நகரில், தமிழகம், அரியானா அணிகளுக்கு இடையிலான காலிறுதிப் போட்டி நடந்தது. முதல் இன்னிங்சில் அரியானா அணி 6 விக்கெட்டுக்கு 379 ரன்கள் எடுத்து “டிக்ளேர்’ செய்தது. மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 72 ரன்கள் எடுத்திருந்தது.

சதிஷ் சதம்:பனிமூட்டம் காரணமாக நேற்றைய 4வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் தாமதமாக துவங்கியது. முதல் இன்னிங்சை தொடர்ந்த தமிழக வீரர் அபினவ் முகுந்த் (34) ஆறுதல் அளித்தார். அடுத்து வந்த வாசுதேவதாஸ் (1) ஏமாற்றினார். பின்னர் இணைந்த கேப்டன் தினேஷ் கார்த்திக், சதிஷ் ஜோடி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு 91 ரன்கள் சேர்த்த போது தினேஷ் கார்த்திக் (57) அவுட்டானார். மறுமுனையில் அதிரடி காட்டிய சதிஷ் சதம் கடந்தார். இவர் 106 ரன்களுக்கு அவுட்டார்.

கைகொடுத்த “ரன்-ரேட்’: நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 285 ரன்கள் எடுத்திருந்தது. கணபதி (17), அஷ்வின் (5) அவுட்டாகாமல் இருந்தனர். இதனால் இப்போட்டி “டிரா’ என அறிவிக்கப்பட்டது. இருப்பினும் அரியானா (3.26) அணியை விட கூடுதலாக “ரன்-ரேட்’ பெற்ற தமிழக அணி (3.60) அரையிறுதிக்கு தகுதிபெற்றது. அடுத்த மாதம் 3ம் தேதி துவங்கும் அரையிறுதியில் தமிழகம்-ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. மற்றொரு அரையிறுதியில் பரோடா-கர்நாடகா அணிகள் மோதுகின்றன.

மும்பை “அவுட்’:ராஜஸ்தான்-மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டி “டிரா’ ஆனது. இருப்பினும் முதல் இன்னிங்சில் பெற்ற முன்னிலை அடிப்படையில் ராஜஸ்தான் அணி அரையிறுதி வாய்ப்பை பெற்றது. இதேபோல ரயில்வேஸ் அணிக்கு எதிராக முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்ற பரோடா அணி, Doxycycline No Prescription அரையிறுதிக்கு தகுதிபெற்றது. மத்திய பிரதேச அணிக்கு எதிரான காலிறுதியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கர்நாடகா அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

Add Comment