மனித உரிமை மீறல்-உள்நாட்டுப் போர்: இந்தியா, இலங்கை, பாக்.கில் அமைதி குறைகிறது

தீவிரவாதம், உள்நாட்டுப் போர், மனித உரி்மை மீறல்கள் ஆகியவை காரணமாக இந்தியா, பாகிஸ்தான், இலங்கையில் அமைதிச் சூழ்நிலை பெருமளவில் குறைந்துள்ளதாக சர்வதேச Cialis online பொருளாதார, அமைதி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உலக நாடுகளின் World Peace Index பட்டியலை இந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.

அதில் இந்தியாவுக்கு 128வது ரேங்க் கிடைத்துள்ளது. ஒட்டுமொத்த அளவில் உலகில, 2வது ஆண்டாக தொடர்ந்து அமைதிக் குறைவு அதிகரித்திருப்பதாகவும் இந்த இன்டக்ஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் பல்வேறு உள்நாட்டுப் போர்கள் அதிகரித்துள்ளன. தீவிரவாத செயல்கள் அதிகரித்துள்ளன. மனித உரிமை மீறல்களும் பெருமளவில் அதிகரித்துள்ளதாகவும் அதி்ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு நாடுகளில் குற்றச் செயல்கள், வன்முறைச் சம்பவங்கள், கொலைகள் அதிகரித்துள்ளதாகவும் இந்த ஆய்வு மையம் கூறுகிறது.

தெற்காசியாவைப் பொறுத்தவரை, பெருமளவில் அமைதி குறைந்துள்ளதாக இது கூறுகிறது. மேலும் மரணங்கள் அதிகரித்துள்ளதாகவும், மனித உரிமை மீறல்கள் பெருமளவில் இருப்பதாகவும் இந்த இன்டக்ஸில் கூறப்பட்டுள்ளது.

Add Comment