கடையநல்லூரில் இலவச “டிவி’ வழங்கல்தே.மு.தி.க.-காங்.,மோதலால் பரபரப்பு

கடையநல்லூரில் இலவச கலர் “டிவி’ வழங்கும் நிகழ்ச்சியின்போது தே.மு.தி.க.,- காங்.,இடையே மோதல் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பான நிலை காணப்பட்டது.தமிழக அரசின் இலவச கலர் “டிவி’ வழங்கும் நிகழ்ச்சி கடையநல்லூர் பகுதியில் நேற்று நடந்தது. நகராட்சி பகுதிக்கு வரவழைக்கப்பட்ட 15 ஆயிரம் இலவச கலர் “டிவி’கள் 6 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனிடையில் நேற்று தொகுதி எம்எல்ஏ பீட்டர் அல்போன்ஸ், தென்காசி தாசில்தார் விஜயா மற்றும் அரசியல் கட்சியினர், வருவாய்துறையினர் ஒவ்வொரு பகுதியாக துவக்கி வைத்து வந்தனர்.முத்துகிருஷ்ணாபுரம் திருமண மண்டபம் ஒன்றில் அப்பகுதியினை சேர்ந்த வார்டு பொதுமக்களுக்கு தமிழக அரசின் இலவச கலர் “டிவி’ வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழா துவங்குவதற்கு முன்பே அப்பகுதியினை சேர்ந்த தே.மு.தி.க.,வினர், “கொடுத்தால் அனைவருக்கும் இலவச கலர் “டிவி’ கொடு, இல்லையென்றால் யாருக்கும் வேண்டாம், வேண்டாம் வேண்டாம் இலவச “டிவி’ வேண்டாம், வேண்டும் வேண்டும் இலவச கேபிள் “டிவி’ வேண்டும் போன்ற வாசகங்கள் அடங்கிய போர்டுகளை கையில் ஏந்தி கொண்டு இருந்தனர்.அப்போது கலர் “டிவி’ வழங்குவதற்காக பீட்டர் அல்போன்ஸ் எம்எல்ஏ, தாசில்தார் விஜயா மற்றும் அதிகாரிகள் மண்டப பகுதிக்கு வருகை தந்தனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த பெண்கள் சிலர் அனைவருக்கும் இலவச கலர் “டிவி’ வழங்கிட வேண்டும் என்ற கோஷத்தை எழுப்பினர்.அவர்களிடம் எம்எல்ஏ பீட்டர் அல்போன்ஸ், “”கடையநல்லூர் நகராட்சி பகுதியில் இலவச கலர் “டிவி’ பயனாளிகளுக்கு முழுமையான அளவில் கிடைத்திடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை பொறுத்தவரை “டிவி’ வழங்குவதற்கான துவக்க விழா தான் விழா முடிந்த பின்னர் முறையாக “டிவி’கள் வழங்கிட ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்துக் கொண்டிருந்தார்.அப்போது இலவச “டிவி’ தொடர்பான வாசகங்கள் அடங்கிய அட்டைகளை வைத்திருந்த தேமுதிகவினர் திருமண மண்டப முகப்பு பகுதிக்கு வரத் துவங்கினர். அங்கிருந்து கோஷமிட்டபடி இருந்தனர். அப்போது திடீரென காங்கிரசாருக்கும், தேமுதிகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கையில் வைத்திருந்த தட்டி போர்டுகள் கிழித்து எறியப்பட்டன. இதனால் அப்பகுதியில் பரபரப்பும், பதட்டமான நிலை காணப்படவே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இரு கட்சியினரையும் சமாதானப்படுத்தினர்.இதனால் அப்பகுதியில் காணப்பட்ட பரபரப்பினை அடுத்து தொடர்ந்து எம்எல்ஏ பேசுகையில், “”இலவச கலர் டிவி வழங்கும் திட்டத்தின் அறிவிப்பினை தேர்தல் வாக்குறுதியில் அளித்த போது அதனை எப்படி வழங்குவார்கள், இதெல்லாம் சாத்தியமில்லை என்று கூறிய கூட்டத்தினர் Viagra online தான் தற்போது இலவச “டிவி’ வழங்கிவிட்டார்களே என்ற ஆதங்கத்திலும், வேகத்திலும் இதுபோன்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலவச “டிவி’ வழங்குவதை கண்டு எரிச்சலும் பொறாமையும் அடைந்துள்ளனர். எனவே போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பற்றி கவலையில்லை. கடையநல்லூரில் இலவச “டிவி’ வழங்கும் பணிகள் தொடரும் என கூறினார்.இதனிடையில் தேமுதிகவினரை தாக்கிய காங்., பிரமுகரை கைது செய்ய வேண்டுமென தெரிவித்து நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தின் முன் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து தே.மு.தி.க., மாவட்ட மாணவரணி செயலாளர் சங்கர் என்பவரை கடையநல்லூர் போலீசார் அழைத்து சென்றனர். இதனை கண்டித்து அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கோஷமிட்டனர். தொடர்ந்து அப்பகுதியில் பரபரப்பான சூழல் காணப்பட்ட நிலையில் புளியங்குடி டிஎஸ்பி ஜமீம் அப்பகுதிக்கு விரைந்து வந்தார்.சம்பவம் தொடர்பாக தேமுதிக மாணவரணி நிர்வாகி சங்கர் போலீஸ் வேனில் அழைத்து செல்லப்பட்டார். கடையநல்லூரில் நேற்று இலவச “டிவி’ வழங்குவதாக தெரிவிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான மாவடிக்காலிலும் பொதுமக்கள் இலவச காஸ் அடுப்பு பாரபட்சமாக வழங்கப்பட்டிருப்பதாகவும், இப்பகுதி மக்கள் நலனிற்காக புதிய ரேஷன் கடை அமைக்க வேண்டும் எனவும் முறையிட்டனர்.அப்பகுதி பொதுமக்களிடம் எம்எல்ஏ பேசுகையில், “”இலவச காஸ் அடுப்பு பயனாளிகள் தேர்வு அந்தந்த வார்டு மக்கள் பிரதிநிதிகள் மூலம் மேற்கொள்ளப்பட்டதாகவும், இருந்தபோதிலும் உரிய பயனாளிகளுக்கு இலவச காஸ் அடுப்பு கிடைத்திட வருவாய்த்துறை மூலம் ஏற்பாடு செய்யப்படும். பகுதி மக்கள் நலனை கருத்திற்கொண்டு புதிய ரேஷன் கடை துவங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அடுத்த மாதம் கடை திறப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியளித்தார்.இதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு இலவச “டிவி’ வழங்கும் பணியை எம்எல்ஏ துவக்கி வைத்தார்.

Add Comment