இலவச டிவி கொடுக்காத எம்.எல்.ஏ.,கெரோ தே.மு.தி.க.,வினர் 4 பேர் சிறையிலடைப்பு

கடையநல்லூரில் இலவச டிவி வழங்க வந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வை கெரோ செய்த தே.மு.தி.க.,வினர் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூரில் அரசின் இலவச கலர் டிவிகள் இன்னமும் வழங்கப்படவில்லை. கடந்த ஆகஸ்ட்டில்7 ஆயிரத்து 500 டிவிகள் கொண்டுவரப்பட்டன. பொதுமக்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டது. 23 ஆயிரம் டிவிகள் தேவை இருந்ததால் buy Bactrim online அப்போது வழங்கப்படவில்லை. அந்த டிவிகள் சபாநாயகர் ஆவுடையப்பன் தொகுதிக்கு கொண்டு செல்லப்பட்டன. நேற்று மீண்டும் டிவிகளை தொகுதி காங்.,எம்.எல்.ஏ.,பீட்டர்அல்போன்ஸ் வழங்குவதாக இருந்தது. கடையநல்லூர், மாவடிக்காலுக்கு வந்த பீட்டரை பெண்கள் முற்றுகையிட்டனர். எங்கள் பகுதிக்கு இன்னமும் இலவச கேஸ் அடுப்புகள் வழங்கப்படவில்லை என குறை கூறினர். ஒரு நபருக்கு மட்டும் டிவியை வழங்கி போட்டோ எடுத்துக்கொண்டு கிளம்பினார். டிவி பற்றாக்குறை ஏற்பட்டால் ஏழைகளுக்கு மட்டும் முதலில் வழங்கப்படும் பின்னர் அனைவருக்கும் வழங்கப்படும் என பீட்டர் தெரிவித்தார். இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர் முத்துக்கிருஷ்ணாபுரத்திற்கு சென்று அதே போல ஒரு நபருக்கு டிவி வழங்கினார். அங்கு திரண்ட தே.மு.தி.க., புதிய தமிழகம்கட்சியினர் அனைவருக்கும் டிவி வழங்கவேண்டும் என கோரி பீட்டரை முற்றுகையிட்டு கெரோ செய்தனர். அவருடன் வந்த காங்கிரசாருக்கும் மற்ற கட்சியினருக்கும் இடையே மோதல் கைகலப்பு ஏற்பட்டது. போலீசார் புகுந்து கலைத்தனர்.பீட்டர் மொத்தம் நான்கு டிவிக்களை மட்டுமே கொடுத்தார். எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு பிரச்னை ஏற்படுத்துவதாக எம்.எல்.ஏ.,பீட்டர் தெரிவித்தார். பீட்டர்அல்போன்சை முற்றுகையிட்டு கெரோ செய்த தே.மு.தி.க.,மாவட்ட மாணவரணி செயலாளர் சங்கர், நகர செயலர் சரவணன், நகரதுணைச்செயலர் அய்யாத்துரை, ஒன்றிய செயலர் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு தென்காசி சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் தே.மு.தி.க.,புதிய தமிழகம் கட்சியை சேர்ந்த 20 பேரை தேடிவருகின்றனர்.

Add Comment