இஸ்லாமிய இலக்கியக் கழகம் கடையநல்லூர் (கிளை)

இஸ்லாமிய இலக்கியக் கழகம் கடையநல்லூர் (கிளை)
சிங்கப்பூர் – கடையநல்லூர் முஸ்லிம் லீக் நிர்வாகிகளுக்கு நடத்திய வரவேற்பு விழா ஹிதாயத்துல் இஸ்லாம் மேனிலைப் பள்ளியில் இன்று 07/12/2012 வெள்ளி மாலை 04.30 மணிக்கு வெகு விமரிசையாக நடைபெற்றது.

சேவைச் செம்மல் செந்தமிழ்க் கவிஞர் ஜனாப் அல்ஹாஜ்
M A மசூது B A (செயலாளர் , சிங்கப்பூர் -கடையநல்லூர் முஸ்லிம் லீக்)அவர்களுக்கும் அழ ஹாஜ் A நசீர் கனி B .Sc .
(தலைவர் சிங்கப்பூர்- கடையநல்லூர் முஸ்லிம் லீக்) அவர்களுக்கும் வரவேற்பு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

ஜனாப் அல்ஹாஜ் எஸ். எ.அப்பாஸ் M A B T அவர்கள் தலைமை தாங்கினார்கள் மௌலானா மௌலவி O .M .குதுபுதீன் ஆலிம் மஹ்ழரி கிரா அத ஓதினார்கள் ஜனாப்
முனைவர் P S செய்யது மசூது ஜமாலி எம். எ. Phd ஜனாப் மௌலவி எம் செய்யது இப்ராஹீம் ஆலிம் அவர்களும், ஜனாப் அல்ஹாஜ் எ. ஒய் முஹ்யித்தீன் ஆலிம் அவர்களும் நெல்லை மஜீத் அவர்களும் வரவேற்றுப் பேசினார்கள். விருந்தினர்களுக்குப் பன்னாடை போர்த்தி டாக்டர் E M இஸ்மாயீல் அவர்கள் கௌரவித்தார்கள் . பிரதான விருந்தினர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசுகளையும் வழங்கி மின்னல் உதுமான் முஹ்யித்தீன், செங்கற் எஸ். எஸ். இப்ராஹீம் ஷா ஆகியோர் கௌரவித்தார்கள். கூட்டத்திற்கு ஆண்களும் பெண்களும் திரளாக வந்திருந்து சிறப்பித்தார்கள்.

இலக்கியக் கழகத்தின் செயலாளர் ஜனாப் செயன் இபுராஹீம் அவர்கள் வந்த விருந்தினர்கள் ஆற்றிவரும் சேவைகளை விரிவாக எடுத்துரைத்தார்கள்.

Buy cheap Viagra style=”text-align: justify;”>ஏற்புரை நிகழ்த்திய ஜனாப் எம். எ. மசூது அவர்கள் இலக்கியக் கழகம் சார்பில் ஒரு நூலகம் அமையும் பட்சத்தில் அதற்கான முழுப் பொறுப்பினையும் சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக் ஏற்றுக் கொள்ளும் என்று பலத்த கரவொலிக்கிடையே அறிவித்தார்கள்

நிகழ்ச்சியனை செயன் ஹமீது அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்.

இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் நெறியாளர் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் கைபேசி மூலம் ஜனாப் அல்ஹாஜ் எம். எ. மசூது அவர்களைத் தொடர்புகொண்டு கடையநல்லூர் இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் சார்பில் நூல் நிலையம் அமைக்க உதவிகள் செய்வதாதாக வாக்களித்தமைக்காக நன்றி கூறினார்கள்

%%wppa%%
%%slide=169%%

Add Comment