துபாயில் நகரத்தார் சங்க 130 வது கலந்துரையாடல் நிகழ்ச்சி

துபாய் : துபாயில் நகரத்தார் சங்கத்தின் 130-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி செட்டிநாடு இல்லத்தில் 02.12.2010, வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் தொடங்கப்பெற்று மாலை 7.00 மணிவரை நடைபெற்றது.

கடவுள் வாழ்த்துப் பாடலை செல்வி.நந்தினி சரவணன் வழங்கினார்.திருக்குறள் ஒப்புவித்தல் நிகழ்ச்சியை செல்வி.லலித் கோதண்டராமன் வழங்கினார். தலைவர் உரையினை திரு.வீர.அழகப்பன் அண்ணன் வழங்கினார்.

இக்கலந்துரையாடல் நிகழ்ச்சியானது குழந்தைகள் தின விழாவாகக் கொண்டாடப்பெற்றது.”சிந்தனை நேரம்” நிகழ்ச்சியை திரு.சித.மணிகண்டன் அவர்கள் வழங்கினார்கள்.“வள்ளி இசையல்” என்ற நாடகம் திரு.R.முத்து மாணிக்கம் மற்றும் திரு.இராம.நாகப்பன் குழுவினரின் தலைமையில் நடைபெற்றது.குழந்தைகளுக்கான மாறு வேடப் போட்டி,பொது அறிவு திறன் மற்றும் வினாடி வினா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. குழந்தைகளின் சிந்தனைத் துளிகளை நாடக நகைச்சுவையாக சுபஸ்ரீ, அனுஸ்ரீமணிகண்டன் வழங்கினர்.அபுதாபியில் இருந்து வருகை தந்த “ஏழு ஸ்வரங்கள் இன்னிசைக் குழுவின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

சங்கமம் Lasix online தொலைக்காட்சியின் திரு.கலையன்பன் கலந்துக் கொண்டார்கள்.

இந்நிகழ்ச்சியில் கல்விக்கு சுமார் 25,000.00 ரூபாய் மற்றும் திருமண நிதி உதவிகளுக்கு சுமார் 52,500.00 ரூபாய் பண உதவி செய்யப்பட்டது.

சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து செயலாளர் திரு.சுவாமி நாதன் எடுத்துரைத்தார்கள்.புதிய உறுப்பினர்கள் அறிமுகப்படுத்தப் பட்டார்கள்.போட்டிகளில் கலந்துக் கொண்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.நன்றியுரை திரு.சுவாமி நாதன் வழங்கினார்.

Add Comment