தெரிந்து கொள்வோம் – கருப்புப் பெட்டி!

விமான விபத்துக்கள் நடக்கும் போதெல்லாம் விபத்துக்கான காரணங்களையறிய விமானத்தின் கருப்புப் பெட்டியை தேடும் பணி ந்டக்கிறது என்ற செய்தி தவறாமல் இடம் பெறும். அது என்ன கருப்புப் பெட்டி..? அதைப்பற்றிய சில விவரங்களைத் தெரிந்து கொள்வோமா…

அது கருப்புப் பெட்டி என்றழைக்கப்பட்டாலும் கருப்பு Buy Amoxil நிறத்தில் இருக்காது; எளிதில் அடையாளம் காணும் வகையில் ஆரஞ்சு அல்லது சிவப்பு வண்ணத்திலிருக்கும். எஃகால் செய்யப்பட்ட மிகவும் உறுதியான பெட்டி இது. இதன் மீது பல அடுக்குகளாக எஃகுத் தகடுகள் சுற்றப்பட்டிருக்கும்.

இது எவ்வளவு கடுமையான விபத்திலும் சேதமடையாது; 2012 டிக்ரி ஃபாரன்ஹீட் வெப்பத்தை தாங்கும் அளவுக்கு உறுதியானது. 1100 டன் அளவுக்கு இரும்பு பாரத்தை இதன் மீது ஏற்றினாலும் இது ந்சுங்காது. கடலின் ஆழத்தில் வீழ்ந்தாலும் எவ்வித பாதிப்பிற்கும் உள்ளாகாது.இதனுள்ளிருக்கும் பேட்டரிகள் 6 ஆண்டுகள் வரை செயல்படும்.

இதனுள் 2 பிரிவுகள் இருக்கும். ஒன்று Flight data recorder எனப்படும்; விமானம் பறக்கும் உயரம், வேகம், நேரம் போன்ற விவரங்கள் இதில் பதிவாகும். மற்றொன்று Voice recorder எனப்படும்; இதில் விமானியின் அறையில் ந்டக்கும் உரையாடல்கள் மற்றும் அங்கு ஏற்படும் சப்தங்கள் இதில் பதிவாகும்.

இந்தப் பெட்டி விமானத்தின் வால் பகுதியில் இருக்கும். இதிலிருந்து பீப்.. பீப் ..என்ற ஒலி எப்போதும் வந்து கொண்டேயிருக்கும் ; விமான விபத்திற்குப் பிறகு இப்பெட்டியை தேடிக் கண்டுபிடிக்க இந்த ஒலி உதவுகிறது…..

Add Comment