யூடியூப்பிற்கு போட்டியாக ஈரானின் ‘மேர்’!!!

யூடியூப் போன்ற காணொளிகள் பகிரும் தளமொன்றை ஈரான் ஆரம்பித்துள்ளது. ஈரானிய அரசாங்கம் தான் தடைசெய்துள்ள தளங்களுக்கு மாற்றீடாக சில தளங்களை அறிமுகப்படுத்தி வருகின்றது.

Buy Cialis style=”text-align: justify;”>அவ்வரிசையிலேயே யூடியூப்பிற்கு பதிலாக ‘ மேர்’ (Mehr)….

யூடியூப்பிற்கு போட்டியாக ஈரானின் ‘மேர்’என்ற தளத்தை ஆரம்பித்துள்ளது.

ஈரான் மற்றும் இஸ்லாமிய கலாசாரத்தினை ஊக்குவிப்பதுடன் அந்நாட்டு கலைஞர்களின் படைப்புகளை வெளியுலகிற்கு கொண்டுசெல்வதே இத்தளத்தின் பிரதான நோக்கம் என தெரிவிக்கப்படுகின்றது.எனினும் இத்தளமும் மிகத்தீவிரமாக கண்காணிப்புக்குள்ளாகுமெனவும் நம்பப்படுகின்றது.

ஈரானில் பேஸ்புக், டுவிட்டர் போன்ற தளங்கள் ஏற்கனவே தடைசெய்யப்பட்டுள்ளன. இவற்றின் ஊடாக அரசிற்கு எதிரான கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெறுவதாக குற்றஞ்சாட்டியே தடைசெய்யப்பட்டுள்ளன.

அந்நாடானது மக்களின் கருத்துச் சுதந்திரத்திற்கு தடைவிதிப்பதுடன் அவர்களை அடக்கி வைக்கும் முகமாகவே இத்தகைய தடைகளை ஏற்படுத்தி வருவதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும் ஈரானின் அணுச் செறிவாக்கல் நிலையங்கள், முக்கிய அரச ஸ்தாபனங்கள் ஆகியவற்றின் இணையக் கட்டமைப்புகள் மற்றும் கணனிகள் அடிக்கடி வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகின்றமையை அடுத்து ஈரான் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

இத் தாக்குதல்களின் போது அதன் முக்கிய இராணுவ மற்றும் இராஜதந்திர தகவல்கள் இணையம் மூலமாகத் திருடப்பட்டன.
குறிப்பாக ஸ்டக்ஸ்நெட் மற்றும் பிளேம் என்றறியப்பட்ட வைரஸ்கள் ஈரானுக்கு பெரும் தலையிடியாக மாறின.

இவ் வைரஸ்கள் அமெரிக்க மற்றும் இஸ்ரேலினாலேயே உருவாக்கப்பட்டதாக ஈரான் குற்றஞ்சாட்டி வருகின்றது.

நாளுக்கு நாள் அதிகரித்துவரும் இணையமூடான தாக்குதலைக் கருத்தில் கொண்டு நாட்டின் முக்கியமான அமைச்சரவை மற்றும் அரச ஸ்தாபனங்களுக்கான உலகளாவிய இணையத்தொடர்பை நிறுத்துவதென முடிவு செய்தது.

உலகளாவிய இணையத்துக்குப் பதிலாக தமது நாட்டிற்கென பிரத்தியேகமாக உள்வலையமைப்புகளை (intranet) உருவாக்கும் பணியில் ஈரான் ஈடுபட்டது.

தற்போது ஈரானின் உள்வலையமைப்புகளை உருவாக்கும் பணியானது நிறைவடைந்துள்ளதுடன் அவ் இணையமானது செயற்படத்தொடங்கியுள்ளதாகவும், அது வெற்றிகரமாக செயற்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Add Comment