சல்லாப விவகாரத்தில் மேலும் ஒரு மாஜி போலீஸ் அதிகாரி

அரியானா மாநில மாஜி டி.எஸ்.பி. ரத்தோரும் தலைப்பு செய்திகளில் இன்னமும் வந்து போய் கொண்டு தான் இருக்கிறார். இந்நிலையில் அதே மாநிலத்தைச் சேர்ந்த மேலும் ஒரு போலீஸ் உயர் அதிகாரி பெண் விவகாரத்தில் சிக்கியுள்ளார். அரியானா மாநிலம் மாஜி ஐ.ஜி., எம்.எஸ்.அஹ்லாவாத். இவர் யமுனா நகரில் எஸ்.பி.,யாக இருந்த போது பெண் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் சிக்கியுள்ளார்.

ருச்சிகா வழக்கில் மாஜி டி.ஜி.பி., ரத்‌தோருக்கு ஒன்றரை ஆண்டு காலம் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. அவர் புராலியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ருச்சிகா வழக்கில் ரத்தோருக்கு கூடுதல் தண்டனை வழங்க‌ வேண்டும் என்று பெரிய அளவில் போராட்டங்கள் நடந்து வந்த போது அர்வீந்தர் கவர் என்ற இளம் பெண் டி.ஜி.பி., அலுவலகம் முன் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து இந்த வழக்கு குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. அஹ்லாவாத் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் ஓய்வு பெற்றார். தற்போது அவர் மீது நடவடிக்கையை தொடங்கியுள்ளது போலீஸ். அவர் மீது மிரட்டல், பாலியல் துன்புறுத்தல், ஆகிய குற்றங்களுக்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் விசாரணையை தொடங்கி விட்டதாக யமுனா நகர் போலீஸ் ஸ்டேஷன் சிறப்பு காவல் அலுவலர் மனோகர் லால் தெரிவித்தார்.

கவுர் நம்பிக்கை : ருச்சிகா வழக்கில் ரத்தோர் தண்டிக்கப்பட்டுள்ளது போல், தனது விவகாரத்திலும் நியாயம் கிடைக்கும் என நம்புவதாக தெரிவித்தார். புகார் தெரிவித்து 9 ஆண்டுகளுக்குப் பிறகு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது Levitra online என்றார்.

Add Comment