தொடரை வென்றது நியூசிலாந்து* பாக்., பரிதாபம்

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது “டுவென்டி-20′ போட்டியில், 39 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை, 2-0 என கைப்பற்றியது.

நியூசிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி, 3 “டுவென்டி-20′, 2 டெஸ்ட் மற்றும் 6 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் “டுவென்டி-20′ போட்டியில், வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி 1-0 என முன்னிலை பெற்றிருந்தது. இரண்டாவது போட்டி நேற்று ஹாமில்டனில் நடந்தது.

கப்டில் அதிரடி:முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணிக்கு கப்டில் (44) அதிரடி துவக்கம் தந்தார். இவருடன் இணைந்த ரைடர் (0) டக்-அவுட்டானார். அடுத்து வந்த பிராங்க்ளின் (40), ஸ்டைரிஸ் (34), மெக்கிளாசன் (26), டெய்லர் buy Ampicillin online (30*) ஆகியோர் பொறுப்புடன் ஆடி ரன் சேர்த்தனர். நாதன் மெக்கலம் (1), மில்ஸ் (0) சொதப்பினர். 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து அணி, 185 ரன்கள் சேர்த்தது.

ஹபீஸ் ஆறுதல்: சவாலான இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணிக்கு, ஹபீஸ் (46) அபார துவக்கம் தந்தார். ஆனால் அடுத்த வந்த வீரர்கள் பெரும் ஏமாற்றம் அளித்தனர். கேப்டன் அப்ரிதி (7), அகமது (15), யூனிஸ் கான் (3), அசத் (6), ரசாக் (14), குல் (0) ஆகியோர் சொற்ப ரன்களுக்கு பெவிலியன் திரும்பினர். சற்று நேரம் தாக்குப் பிடித்த உமர் அக்மல் (26), ரியாஸ் (18) ஓரளவு ரன் சேர்த்தனர். 20 ஓவர் முடிவில், 9 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் அணி, 146 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. பந்து வீச்சில் மிரட்டிய நாதன் மெக்கலம் 4 விக்கெட் வீழ்த்தினார். இவ்வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி “டுவென்டி-20′ தொடரை 2-0 என தன் வசப்படுத்தியது. இவ்விரு அணிகள் மோதும் 3 வது “டுவென்டி-20′ போட்டி வரும் 30 ம் தேதி கிறிஸ்ட்சர்ச்சில் நடக்க உள்ளது

Add Comment