சாதிப்பார்களா இந்திய பவுலர்கள்!* பரபரப்பான கட்டத்தில் டர்பன் டெஸ்ட்* லட்சுமண், ஸ்ரீசாந்த் அபாரம்

டர்பன் டெஸ்ட் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று தூணாக நின்ற லட்சுமண் (96) இந்திய அணிக்கு கைகொடுத்தார். பின் 303 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணி ஸ்ரீசாந்த் வேகத்தில் திணறியது. 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து 111 ரன்கள் எடுத்துள்ளது. இன்று எஞ்சிய விக்கெட்டுகளை நமது பவுலர்கள் வீழ்த்தினால், மகத்தான வெற்றி பெறலாம். ஒருவேளை காலிஸ், பவுச்சர் பதிலடி கொடுத்தால், தென் ஆப்ரிக்கா சாதிக்கலாம்.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் வென்ற தென் ஆப்ரிக்க அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது டெஸ்ட் டர்பனில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 205 ரன்கள் எடுத்தது. தென் ஆப்ரிக்க அணி 131 ரன்களுக்கு சுருண்டது. இரண்டாம் நாள் ஆட்டம் நேர முடிவில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்திருந்தது.

நழுவிய சதம்:நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. மார்கல் Doxycycline online வீசிய “பவுன்சரில்’ புஜாரா(10) வீழ்ந்தார். பின் கேப்டன் தோனி, லட்சுமண் இணைந்து அதிரடியாக ஆடினர். ஸ்டைன் ஓவரில் தோனி அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி அடித்தார். 6வது விக்கெட்டுக்கு 48 ரன்கள் சேர்த்த நிலையில், தோனி(21) அவுட்டானார். ஹர்பஜன் சிங்(4) தாக்குப்பிடிக்கவில்லை. அடுத்து வந்த ஜாகிர் கான் “கம்பெனி’ கொடுக்க, லட்சுமண் தனது அபார ஆட்டத்தை தொடர்ந்தார். இவர்கள் 8வது விக்கெட்டுக்கு 70 ரன்கள் சேர்த்த நிலையில், ஜாகிர் கான்(27) வெளியேறினார். சிறிது நேரத்தில் ஸ்டைன் வேகத்தில் சிக்கிய லட்சுமண்(96), சதம் அடிக்கும் வாய்ப்பை நூலிழையில் நழுவ விட்டார். இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 228 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் தென் ஆப்ரிக்க அணிக்கு 303 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

ஸ்ரீசாந்த் அசத்தல்:சவாலான இலக்கை விரட்டிய தென் ஆப்ரிக்க அணிக்கு கேப்டன் ஸ்மித், அல்விரோ பீட்டர்சன் சேர்ந்து நல்ல அடித்தளம் அமைத்தனர். இவர்கள், இந்திய வேகங்களை எளிதாக சமாளித்தனர். ஜாகிர், இஷாந்த் பந்துகளை பவுண்டரிக்கு பறக்க விட்டனர். இந்த நேரத்தில் ஸ்ரீசாந்த் திருப்புமுனை ஏற்படுத்தினார். இவரது வேகத்தில் ஸ்மித்(37) அவுட்டாக, நிம்மதி பிறந்தது. தேநீர் இடைவேளைக்கு பின் இந்திய அணியின் கை மேலோங்கியது. ஹர்பஜன் சுழலில் பீட்டர்சன்(26) சிக்கினார். ஸ்ரீசாந்த் வீசிய அடுத்த ஓவரில் “ஆபத்தான’ ஹஷிம் ஆம்லா(16), தோனியின் சூப்பர் “கேட்ச்சில்’ அவுட்டானார். போதிய வெளிச்சம் இல்லாததால் நேற்றைய ஆட்டம் முன்னதாகவே முடிக்கப்பட்டது. அப்போது தென் ஆப்ரிக்க அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 111 ரன்கள் எடுத்திருந்தது. காலிஸ்(12), டிவிலியர்ஸ்(17) அவுட்டாகாமல் இருந்தனர்.
தற்போது தென் ஆப்ரிக்க அணியின் வெற்றிக்கு 192 ரன்கள் தேவைப்படுகிறது. காலிஸ் உள்ளிட்டோர் கைகொடுத்தால் சாதிக்கலாம். இந்தியாவை பொறுத்தவரை, பவுலர்கள் சாதித்தால், வெற்றியை ருசிக்கலாம்.

ஸ்ரீசாந்த் ஆக்ரோஷம்
வழக்கம் போல ஆக்ரோஷமாக பந்துவீசினார் இந்தியாவின் ஸ்ரீசாந்த். இவரது “பவுன்சர்’ தனது விரலை தாக்க, தென் ஆப்ரிக்க கேப்டன் ஸ்மித் கடும் ஆத்திரமடைந்தார். தனது “பேட்டை’ அவரை நோக்கி நீட்டி ஏதோ கூறினார். பின் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இறுதியில் ஸ்மித்தை அவுட்டாக்கி பதிலடி கொடுத்தார் ஸ்ரீசாந்த்.

புஜாரா தவறு
நேற்று ஹர்பஜன் சுழலில் காலிஸ் கொடுத்த “கேட்ச்’ வாய்ப்பை “லெக் ஸ்லிப்பில்’ நின்ற புஜாரா கோட்டை விட்டார். அப்போது காலிஸ் ரன் எதுவும் எடுக்கவில்லை. பொதுவாக இரண்டாவது இன்னிங்சில் சிறப்பாக விளையாடக் கூடியவர் காலிஸ். இதனை உணராமல் புஜாரா மிகப் பெரும் தவறு செய்தார்.

ஸ்கோர் போர்டு

முதல் இன்னிங்ஸ்

இந்தியா 205

தென் ஆப்ரிக்கா 131

இரண்டாவது இன்னிங்ஸ்

இந்தியா

சேவக் (கே) பவுச்சர் (ப) டிசோட்சபே 32 (31)
விஜய் (கே) ஆம்லா (ப) மார்கல் 9 (27)
டிராவிட் (கே) பவுச்சர் (ப) டிசோட்சபே 2 (7)
சச்சின் (கே) டிவிலியர்ஸ் (ப) ஸ்டைன் 6 (10)
லட்சுமண் -(கே) பவுச்சர் (ப) ஸ்டைன் 96 (171)
புஜாரா (ப) மார்கல் 10 (56)
தோனி (கே) பவுச்சர் (ப) டிசோட்சபே 21 (35)
ஹர்பஜன் (கே) காலிஸ் (ப) மார்கல் 4 (7)
ஜாகிர் (கே) டிவிலியர்ஸ் (ப) ஹாரிஸ் 27 (63)
இஷாந்த் (கே) ஆம்லா (ப) காலிஸ் 0 (16)
ஸ்ரீசாந்த் -அவுட் இல்லை- 0 (2)
உதிரிகள் 21
மொத்தம் (70.5 ஓவரில் ஆல்-அவுட்) 228
விக்கெட் வீழ்ச்சி: 1-42 (சேவக்), 2-44 (விஜய்), 3-48 (டிராவிட்), 4-56 (சச்சின்), 5-93 (புஜாரா), 6-141 (தோனி), 7-148 (ஹர்பஜன்), 8-218 (ஜாகிர்), 9-223 (இஷாந்த்), 10-228 (லட்சுமண்).
பந்து வீச்சு: ஸ்டைன் 15.5-1-60-2, மார்கல்15-1-47-3, டிசோட்சபே 13-3-43-3, காலிஸ் 13-2-30-1, ஹாரிஸ் 14-2-36-1.

தென் ஆப்ரிக்கா
ஸ்மித் (கே) தோனி (ப) ஸ்ரீசாந்த் 37 (38)
பீட்டர்சன் (கே) புஜாரா (ப) ஹர்பஜன் 26 (45)
ஆம்லா (கே) தோனி (ப) ஸ்ரீசாந்த் 16 (16)
காலிஸ் -அவுட் இல்லை- 12 (28)
டிவிலியர்ஸ் -அவுட் இல்லை- 17 (38)
உதிரிகள் 3
மொத்தம் (27 ஓவரில் 3 விக்.,) 111
விக்கெட் வீழ்ச்சி: 1-63 (ஸ்மித்), 2-82 (பீட்டர்சன்), 3-82 (ஆம்லா).
பந்து வீச்சு: ஜாகிர் 6-2-25-0, இஷாந்த் 5-0-21-0, ஸ்ரீசாந்த் 7-0-30-2, ஹர்பஜன் 8-0-29-1, சச்சின் 1-0-6-0.

Add Comment