சந்திக்கு வரும் சன் டிவி இரகசியங்கள் – மாறனின் முகத்திரையை கிழிப்பேன் என்கிறார் சக்சேனா!

சன், “டிவி’ கலாநிதியின் முகத்திரையை, சில நாட்களில், கிழித்து எறிந்து, உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வருவேன்,” என, “சன் பிக்சர்ஸ்’ முன்னாள் செயல் அலுவலர் சக்சேனா தெரிவித்தார். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், “சன்’ குழுமத்தில் பணியாற்றிய முன்னாள் ஊழியர், அய்யப்பன் புகார் கொடுத்த போது, உடன் வந்திருந்த, “சன் பிக்சர்ஸ்’ முன்னாள் நிர்வாக இயக்குனர், சக்சேனா அளித்த பேட்டி:

சன், “டிவி’ நெர்வொர்க் நிறுவனத்தில், கலாநிதி மாறனுக்கு அடுத்த நிலையில், முதன்மை நிர்வாக அதிகாரியாக வேலை பார்த்து வந்தேன். பொது நிகழ்ச்சிகளில், கலாநிதி தலைகாட்ட மாட்டார் என்பதால், சினிமா உலகில், பெரும் சக்தியாக இருந்து வந்தேன். கலாநிதிக்காக, இரவு பகல் பாராமல் உழைத்து இருக்கிறேன். இருவரும் ஒன்றாக படித்தோம்; நண்பன் என, நினைத்து, பசியும், பட்டினியுமாக கிடந்து, 50 ஆயிரம் கோடிக்கு அதிபதி என்று சொல்லும் நிலைக்கு, கலாநிதியை கொண்டு வந்தோம்.

ஆனால், பத்து நிமிடத்தில் பேசி தீர்க்க வேண்டிய பிரச்னையை பூதகரமாக்கி, 79 நாட்கள், என்னை சிறையில் தள்ளி வேடிக்கை பார்த்தார். இதற்கு உடந்தையாக, மேலாளர்கள் ரமேஷ், செம்பியன், கண்ணன் ஆகியோர் இருந்தனர். இவர்கள் செய்து வரும் அட்டகாசங்கள் அனைத்தும், எனக்குத் தெரியும்; அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.

உயிரை கொடுத்து உழைத்த போதிலும், “கோடி கோடியாகக் கொள்ளையடித்து சென்று விட்டான்’ என, என் மீது குற்றம் சாட்டினர். கொள்ளைக்காரர்கள் யார் என்பது, எல்லாருக்கும் தெரியும். தவறு செய்தது யார் என்பதை, போலீஸ் அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் மத்தியில் விவாதிக்க தயாரா? உண்மையை எத்தனை நாள் தான், மூடி மறைக்க முடியும்? அரசியல் பலம், பண பலம், ஆள் பலம் இருக்கிறது என்ற மிரட்டல்கள் எத்தனை நாளைக்கு ஓடும்.

“எந்திரன்’ படத்தை, 210 கோடி ரூபாய்க்கு தயாரித்து, 400 கோடிக்கு விற்றுக் கொடுத்தேனே… அதற்கு நீங்கள் செய்யும் நன்றி கடன் இது தானா? சன், “டிவி’ நெட்வொர்க் நிறுவனத்தில், தூசி அசைந்தாலும் எனக்கு தெரிந்துவிடும் என்று கலாநிதி சொல்வார். அவரது பெயரைச் சொல்லி, ரமேஷ், செம்பியன், கண்ணன் ஆகியோர் நடத்தும் கொள்ளைகள் மட்டும் தெரியாமல் போய்விட்டதா? கலாநிதியின் நிறுவனத்தில் நடந்த விஷயங்கள் அத்தனையும், எனக்கு தெரியும். அதையெல்லாம், வெளிச்சத்திற்கு கொண்டு Viagra online வரப்போகிறேன்.

“மூன்று நாளில் போட்டு தள்ளி விடுவோம்’ என, ஆட்களை வைத்து மிரட்டல் விடுக்கிறார். நான் தவறு செய்திருந்தால், தண்டனையை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறேன்; நீங்கள் செய்த தவறுக்கு என்ன தண்டனை? என் மூலம் தானே, அய்யப்பன் பணம் கொடுத்தார். அந்த பணத்தில், ஆயிரம், நூறு ரூபாய் நோட்டுகள் எத்தனை உள்ளது என, கேமராவில் படம் பிடித்தீர்களே… அதை தற்போது போட்டு பார்க்க கூடாதா?

நித்தியானந்தா – ரஞ்சிதா சி.டி., விவகாரத்தில், என்னை சிக்க வைத்து வேடிக்கை பார்த்தது எதற்காக? தவறு செய்பவர்கள் நீங்கள்; தண்டனை அனுபவிப்பது நானா? “என்னை குடும்பத்தோடு எரித்து விடுவேன்’ என்கிறீர்களே… கலாநிதியின் முகத்திரையை கிழித்தெறிவேன். இவ்வாறு அவர் ஆவேசத்துடன் தெரிவித்தார்.

நித்தி – ரஞ்சிதா சி.டி., விவகாரத்தில் நடந்தது என்ன? – சக்சேனா அளித்த பேட்டி:

விடுமுறைக்காக துபாய் சென்று இருந்த சமயம், நிகழ்ச்சி ஏற்பாட்டு மேலாளர் பெயருக்கு, ஒரு சி.டி., வந்துள்ளது. அதை என் உதவியாளர் ஜோதீஸ்வரன் போட்டு பார்த்துள்ளார். அதில் இருப்பவர்கள் யார் என, அவருக்கு தெரியவில்லை. அந்த சி.டியை, மேலாளர், கண்ணனிடம் காட்டியுள்ளார். அவனுக்கு, சி.டியில் இருப்பது ரஞ்சிதா என்பது தெரிகிறது. ஆண் யாரென்று தெரியவில்லை. கண்ணன் எனக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டு, இது போன்றதொரு சி.டி., வந்துள்ளதை தெரிவித்தார். நான் அதில் கவனம் செலுத்தவில்லை.

அது, சன், “டிவி’ நியூஸ் எடிட்டர் ராஜாவின் கையில் கிடைத்து விட்டது. அதை கலாநிதி மாறனிடம் காட்டி, சி.டி.,யில் இருப்பது, நித்தியானந்தா – ரஞ்சிதா என்ற விபரத்தை தெரிவித்து, “போட்டு கிழித்து விடலாம்’ என, தெரிவித்துள்ளார். அந்த சி.டி.,யின் உண்மை தன்மையை அறிந்து, வெளியிடுமாறு கலாநிதி தெரிவித்து விட்டார். “எந்திரன்’ படத்தை, கிராபிக்ஸ் செய்த சீனிவாசனிடம், அந்த சி.டி., காட்டப்பட்டு, “எழுத்து பூர்வமாக, உண்மை’ என, எழுதி தரும்படி, ராஜா கேட்டார்; அவர் மறுத்து விட்டார்.

என் வாழ்க்கையில், நித்தியானந்தாவை பார்த்ததே இல்லை; ஆனால், இந்த சி.டி., விவகாரத்தில் சம்பந்தமே இல்லாத என்னை, சிக்க வைத்து விட்டனர். சன், “டிவி’ ராஜாவுக்கு, கோடி, கோடியாக சொத்து வந்தது எப்படி என, எனக்கு தெரியும். பணம் வசூலிப்பதில் ராஜாவின் பாணியே தனி. கழிவு நீர் ஓடுகிறது; அதனால் நோய் தொற்று அதிகரித்து வருகிறது என, ஆலை அதிபர்களிடம், லட்சக்கணக்கில் பணம் கறப்பார். சன், “டிவி’ தொடர்பாக, இன்னும் பல விஷயங்கள் உள்ளன. அவற்றை அடுத்தடுத்து தெரிவிப்பேன். இவ்வாறு சக்சேனா தெரிவித்தார்.

 

Add Comment