பிரேசிலே உலகக் கோப்பையை வெல்லும் – நீல்சன் சர்வே

தென் ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ள உலகக்கோப்பைப் போட்டியில் பிரேசில் அணியே சாம்பியன் பட்டத்தை வென்று, கோப்பையை தட்டிச் செல்லும் என்று நீல்சன் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நீல்சன் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் கலந்துகொண்டவர்களில் 34 சதவீதம் பிரேசில்தான் கோப்பையை வெல்லும் என தெரிவித்துள்ளனர்.

பிரேசிலுக்கு அடுத்து கோப்பையை வெல்லும் நாடுகள் என கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டோர் தெரிவித்துள்ள அணிகள் – அர்ஜென்டினா, இங்கிலாந்து, ஜெர்மனி, அமெரிக்கா ஆகியவை. இந்த அணிகளுக்கு தலா 9 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இத்தாலிதான் மீண்டும் கோப்பையை வெல்லும் என தெரிவித்திருப்போர் வெறும் 6 சதவீதம் பேர்தான். இத்தாலி அணி நடப்புச் சாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த உலகக் கோப்பைப் போட்டியில் கலக்கிய பிரான்ஸுக்கு ஆதரவாக 5 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுவதும் 55 நாடுகளைச் சேர்ந்த 27,664 பேர் இந்த சர்வேயில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்துள்ளனர்.

வாக்கெடுப்பு நடந்த உலகின் ஐந்து பிராந்தியங்களில் நான்கு பிராந்தியங்களில் பிரேசிலுக்கே பெரும் ஆதரவு உள்ளது. இதில் லத்தீன் அமெரிக்கப் பகுதியில்தான் பெரும் ஆதரவு காணப்பட்டது. அதாவது 57 சதவீதம் பேர் பிரேசிலுக்கு ஜே போட்டுள்ளனர். இதில் பிரேசிலில் மட்டும் 86 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

வட அமெரிக்காவில் மட்டும்தான் பிரேசில் வெல்லாது என பெரும்பாலானவர்கள் கூறியுள்ளனர். அதாவது 46 சதவீதம் பேர் அமெரிக்காதான் வெல்லும் என கூறியுள்ளனர். அதேசமயம், உலகின் பிற பகுதிளில் buy Viagra online அமெரிக்காவுக்குக் கிடைத்துள்ள ஆதரவு வெறும் 4 சதவீதம்தான்.

ஐரோப்பாவைப் பொறுத்தவரை ஸ்பெயினுக்கு 15 சதவீதமும், ஜெர்மனிக்கு 14, இங்கிலாந்துக்கு 10 சதவீத ஆதரவும் காணப்படுகிறது.

கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 34 சதவீதம் பேர் தீவிர கால்பந்து ரசிகர்கள் என்று தங்களைத்தெரிவித்துள்ளனர். தென் ஆப்பிரிக்காவில் நடைபெறப் போகும் உலகக் கோப்பைப் போட்டிகளை தீவிரமாக பார்ப்போம் என 51 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.

Add Comment