ஏப்ரல் 3ஆம் திகதி 6வது ஐ.பி.எல் போட்டிகள் தொடக்கம் – பிப்ரவரி 3-ல் வீரர்கள் ஏலம்!

2013 ஏப்ரல் 3-ல் 6வது Buy Amoxil ஐ.பி.எல் போட்டிகள் தொடங்கவுள்ளன. இதனால் வீரர்களுக்கான ஏலம் பிப்ரவரி 3 ஆம் திகதி நடக்க உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 5 வருடங்களாக ஐ.பி.எல் போட்டிகள் மிக கோலாகலமாக ரசிகர்களின் எதிர்பார்ப்புகளோடு தொடங்கி, அதே எதிர்பார்ப்போடு முடிந்தாலும் சர்ச்சைகளுக்கு குறைவிருக்காது. இந்தமுறையும் ரசிகர்கள் வெகு ஆவலாக ஐ.பி.எல் போட்டிகளை எதிர்நோக்கும் வண்ணம் பல மாற்றங்களுடன் போட்டிகள் ஆரம்பிக்கும் என்றும் தெரிகிறது.

இந்த முறை பெப்சி ஐ.பி.எல் 2013 என்று போட்டிகள் துவங்க உள்ளன. நிறுவனம் பெப்சியிடம் கைமாறியுள்ளதே இதற்கு காரணம். மேலும் இந்த முறை டெக்கான் அணியை சன் குழுமம் வாங்கி சன் ரைசர்ஸ் என்கிற பெயரில் மோத விடுகிறது. சென்ற ஐபிஎல் இன் போது சென்னை சூப்பர் கிங்க்ஸ் நடப்பு சாம்பியன் என்பதால் சென்னையில் ஆரம்பவிழா தொடங்கியது. அப்போது அந்த விழாவில் அரைகுறை உடையுடன் நடனமாடினார்கள் என்றும் சர்ச்சை எழுந்தது.

இந்த முறை நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் என்பதால் கொல்கத்தாவில் தொடக்கவிழா நடக்க இருக்கிறது. கொல்கத்தா நைட் ரைடர்சுடன் மோத உள்ள அணி இன்னும் தீர்மானிக்கப் படவில்லை. ஏப்ரல் 3- ல் ஆரம்பிக்க உள்ள ஐ பி எல் போட்டிகள், மே  26 -ல் வரை நடக்க உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

Add Comment