டெல்லியை தொடர்ந்து தமிழ்நாட்டையும் உலுக்கியுள்ள பள்ளி மாணவி மீதான துஷ்பிரயோகம்!

தூத்துக்குடி மாவட்டம் சிறீவைகுண்டம் அருகே 7ம் வகுப்பு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புனிதா எனும் 13 வயது பெண், நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு புறப்பட்டு சென்றுள்ளார். எனினும் மாலையில் வீடு திரும்பியிருக்கவில்லை. இதனால் அவளது தாய் மற்றும் தாத்தா ஆகியோர் பல இடங்களில் தேடியுள்ளனர். எனினும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், தாதன்குளம் ரயில் நிலையத்திலிருந்து புனிதாவுடன் பள்ளிக்கு செல்லும் தோழிகளிடம் விசாரித்துள்ளனர். அப்போது புனிதா வியாழக்கிழமை காலையும் பள்ளிக்கு வராதது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், இது குறித்து காவல்துறையினரிடம் புகார் கொடுத்துள்ளனர். இந்நிலையில் தாதன் குளம் ரயில் நிலையத்திற்கு அருகே முள்செடிகள் அடர்ந்திருந்த  பகுதியில், மாணவி புனிதா பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். வாய், மூக்கிலிருந்து ரத்தம் வழிந்திருக்கிறது. ஆடை களையப்பட்டு இருந்ததாகவும், சுடிதார் துப்பட்டாவல் கழுத்து இறுக்கப்பட்டிருந்ததாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.

அச்சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பின்னர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.  இதனையடுத்து அம்மாணவியின் சடலம் கைப்பற்றப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மருத்துவ அறிக்கையின் பின்னரே அவர் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளானாரா என்பது தெரியவரவுள்ளது.

பேருந்து வசதி இல்லாததால் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ரயில் நிலையத்திற்கு நடந்து சென்று அங்கிருந்து நாசரேத் நகருக்கு செல்லும் புனிதா, பின்னர் அதே போன்று மாலையில் திரும்பி வந்துள்ளார்.

இப்போது அரசியல் கட்சிகள் என்ன செய்ய போகின்றன?

அண்மையில் டெல்லியில் இரவு வேளையில் ஓடும் பஸ்ஸில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கிவீசப்பட்ட கல்லூரி மாணவி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறது.

இச்சம்பவத்திற்கு இந்திய பாரளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்த அரசியல் கட்சிகள் இந்த அப்பாவி பெண்ணிற்கு நீதி கிடைக்க என்ன செய்யப் போகின்றனர் என சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பியுள்ளனர் இணையத்தள பாவணையாளர்கள்.

டெல்லி பாலியல் பலாத்கார சம்பவத்திற்கு காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க கோரி டெல்லி முழுவதும் பல்வேறு அமைதி ஊர்வலங்கள், ஆர்ப்பாட்ட பேரணிகள் நடைபெற்று வருகின்றன.

குற்றம் செய்தவர்களுக்கு உரிய தண்டனையை பெற்றுக்கொடுப்பதற்கு முனைவதை விடுத்து,  ஏன் இரவில் வெளியில் செல்கிறீர்கள் என பெண்களை கேள்வி கேட்பது நியாமாகது. பெண்களின் சம உரிமை, சுதந்திரம் என்பவற்றிற்கு திட்டமிட்டே அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறதா என குறித்த ஆர்ப்பாட்ட பேரணிகளில் கலந்து கொண்டவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பாலியல் பலாத்கார சம்பவங்களுக்கு மரணதண்டனை வழங்கப்படுமா?

இதேவேளை டெல்லி பலாத்கார சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் மீது கொலை முயற்சி பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வரை கிடைக்க வைக்க முயற்சி செய்ய போவதாகவும் டெல்லி காவல்துறை நீரஜ் குமார் மற்றும் உள்துறை செயலர் ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளனர்.

எனினும் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றங்களுக்கு மரணதண்டனை வழங்குவது தொடர்பிலான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் எதிர்வரும் 27ம் திகதியன்று டெல்லியில் நடைபெறவுள்ளது.

குறித்த சம்பவத்திற்கு பின் டெல்லி போக்குவரத்தில் அதிரடி மாற்றங்கள்

Buy Levitra justify;”>மேலும் இச்சம்பவத்திற்கு அடுத்து டெல்லியில் பேருந்து போக்குவரத்தில் பல அதிரடி மாற்றங்களும் கொண்டுவரப்பட்டுள்ளன.
தனியார் பேருந்துகள் பயணிகளை ஏற்றிச்செல்ல முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது. கண்ணாடிகளில் கறுப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனங்கள் இயக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன், பேருந்துகள், ஆட்டோக்கள் மற்றும் டாக்சிகளில் வாகன அனுமதி பத்திரங்கள் தெரியும்படி வைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெண்கள் பயணம் செய்யும் பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை குறித்த பாலியல் பலாத்கார சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேரையும் தற்போது கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்கப்பட்டிருந்த செயற்கை சுவாசமும் தற்போது நிறுத்தப்படும் அளவுக்கு அவர் உடல் நிலை தேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Add Comment