குவைத்தில் தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவையின் 15 ஆம் ஆண்டு விழா

குவைத் : குவைத்தில் தமிழ்நாடு முஸ்லிம் no prescription online pharmacy கலாச்சாரப் பேரவையின் 15 ஆம் ஆண்டு விழா 24.12.2010 வெள்ளிக்கிழமை சமூக மறுசீரமைப்பு சங்க அரங்கில் மாலை 5 மணி முதல் 10.30 மணி வரை வெகு விமர்சையாக நடைபெற்றது.

துவக்கமாக முனீர் அஹமது இறைவசனங்களை அரபி மொழியில் வாசித்து அதன் மொழிபெயர்ப்பினை வழங்கினார். துணைத்தலைவர் ஹிதாயத்துல்லாஹ் ஹதீஸ் வாசித்தார். விட்டுக்கட்டி மஸ்தான் தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவையின் சிறப்பு மிகு செயல்பாடுகள் குறித்து எழுதப்பட்ட பாடலைப் பாடினார்.

தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவையின் தலைவர் அப்துல் அலீம் வரவேற்புரை நிகழ்த்தினார்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக வேலூர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான், பாண்டிச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஏ.எம்.ஹெச். நாஜிம், பேரா. முனைவர் அப்துல்லாஹ் ( பெரியார்தாசன் ), பொறியாளர் தேரிருவேலி ஹெச்.க்யூ. நஜ்முதீன், வழக்கறிஞர் ஜெயங்கொண்டாம் ராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்திய தூதரக கவுன்சிலர் கே.நரசிங் ராவ் தனது உரையில் தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவை அதிக உறுப்பினர்களுடன் சிறப்பாகச் செயல்பட்டு வரும் அமைப்பு எனக் குறிப்பிட்டார்.

தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவையின் நிகழ்வுகளுக்கு அணுசரனை வழங்கி வரும் லக்கி பிரஸின் சுலைமான் பாட்சா, டிவிஎஸ் கார்கோ & டிராவல்ஸ், அல் யஸ்ரா ஃபுட்ஸ்டஃப் கம்பெனி, எஸ்.கே.எஸ். குரூப், அப்ராட் இந்தியன்ஸ்.காம், கல்ஃப்மார்ட், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், அல்மராய் உள்ளிட்ட நிறுவனங்கள் நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டன.

தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவையின் 15 ஆம் ஆண்டு மலரின் முதல் பிரதியை லக்கி சுலைமான் பாட்சா வெளியிட இந்திய தூதரக கவுன்சிலர் கே. நரசிங் ராவ் பெற்றுக்கொண்டார்.

துணைத்தலைவர் ஹிதாயத்துல்லாஹ் நன்றி கூறினார்.

மேலும் ஃபிமா தலைவர் சித்திக் வலியகத், தொழிலதிபர் எஸ்.கே. சம்சுதீன் ஹஜ்ரத் உள்ளிட பலர் பங்கேற்றனர். பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 1400 க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

விழா நிகழ்ச்சியினை பொதுச் செயலாளர் ஆவூர் ஏ. பஷீர் அஹமது தொகுத்து வழங்கினார்.

Add Comment