தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் பினாயக்சென் – இலீனா

ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட பிரபல குழந்தைகள் நல மருத்துவரும், மனித உரிமை ஆர்வலருமான பினாயக் சென் கொலைக் குற்றவாளிகள் தங்கும் சிறையில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.

கடந்த திங்கள் கிழமை தனது இரண்டு மகள்களுடன் பினாயக் சென்னின் மனைவி இலீனா அவரை சிறையில் சந்தித்தார். பினாயக் சென் எவருடன் பேசுவதற்கு சிறை அதிகாரிகள் அனுமதிப்பதில்லை. பத்திரிகைகள் அவருக்கு கொடுப்பது கிடையாது. பத்திரிகைகள் கிடைக்காததன் காரணமாக வெளியுலகில் என்ன நடக்கிறது என்பதுக் குறித்து சென்னிற்கு தெரியவில்லை.

இந்தியாவின் பல பாகங்களிலும் உங்களுக்கு ஆதரவு தெரிவித்து பலரும் களமிறங்கியுள்ளனர் என நான் அவரிடம் கூறினேன். நான் கொண்டு சென்ற பத்திரிகைகளை சென்னிடம் கொடுக்க சிறை அதிகாரிகள் அனுமதித்த போதும், அவர் சம்பந்தப்பட்ட செய்திகளைக் கொண்ட பக்கங்களை கிழித்த பிறகே வாசிக்க அனுமதித்தனர்.

பினாயக் சென்னிற்கு அளிக்கப்பட்ட தீர்ப்பு அதிர்ச்சியடையச் செய்துள்ளது. விடுமுறை கழிந்து ஜனவரி 3 ஆம் தேதிக்கு Buy cheap Viagra பிறகு உயர்நீதிமன்றம் செயல்படத் துவங்கும்பொழுது செசன்ஸ் நீதிமன்றத் தீர்ப்பினை எதிர்த்து மேல்முறையீடுச் செய்வோம். இவ்வாறு இலீனா தெரிவித்தார்.

Add Comment