ஃபலஸ்தீன் கைதிகளுக்கு வழக்கறிஞர்களை நியமிப்பதற்கு மறுக்கும் இஸ்ரேல்

இஸ்ரேல் ராணுவம் சிறையிலடைத்த 90 சதவீதம் ஃபலஸ்தீன் கைதிகளுக்கு இஸ்ரேல் வழக்கறிஞர்களை நியமிக்க இஸ்ரேல் மறுத்து வருவதாக இஸ்ரேலின் ஹாரட்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

குற்றத்தை ஒப்புக்கொள்வதற்காக சிறைக் கைதிகளை இஸ்ரேலின் ரகசிய புலனாய்வு ஏஜன்சியான ஷின்பத் கடுமையான சித்திரவதைகளுக்கு ஆளாக்குவதாகவும் அப்பத்திரிகை வெளியிட்ட செய்தி கூறுகிறது.

கைதுச் செய்யப்பட்டவர்களுக்கு வாதாட வழக்கறிஞர்களை நியமிக்க அனுமதி மறுப்பது இஸ்ரேலின் சட்டத் திட்டங்களை மீறும் செயல் என சித்திரவதைகளுக்கு எதிரான பொதுக்கமிட்டி, ஃபலஸ்தீன் சிறைக்கைதிகள் சொசைட்டி ஆகிய அமைப்புகள் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இவ்வமைப்புகளின் ஆய்வறிக்கையை மேற்கோள் காட்டித்தான் ஹாரட்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. சில சிறைக் கைதிகளுக்கு வழக்கறிஞர்களை நியமிக்காமலிருக்க சட்டத்தில் இடமுண்டு என ஷின்பத் வாதிக்கிறது.

சிறைக் கைதிகளை உறங்குவது அனுமதிக்காமை, Bactrim No Prescription உறவினர்களை கொல்வோம் என அச்சுறுத்துவது ஆகியன இஸ்ரேல் புலானாய்வு அதிகாரிகளின் வழக்கமான பாணியாகும். கைகளை பின்னால் கட்டி நாற்காலியில் வைத்து கட்டுவது, சுத்தமில்லாத சிறை அறைகளில் நீண்டகாலம் அடைப்பது ஆகிய சித்திரவதை முறைகளையும் இஸ்ரேலிய புலனாய்வு அதிகாரிகள் மேற்கொள்கின்றனர் என இந்த ஆய்வறிக்கை தயார் செய்ய தலைமை வகித்த டாக்டர் மாய ரோஸன்ஃபெல்ட் தெரிவிக்கிறார்.

வழக்கறிஞர்கள் நியமிக்கப்படாத சிறைக் கைதிகளின் விபரங்களை அளிக்க ஷின்பத் தயாராகவில்லை. இதுத்தொடர்பாக மனித உரிமை அமைப்பான ஸெய்தின், தகவல் உரிமை சுதந்திரத்திற்கான அமைப்பு ஆகியோர் 2009 ஆம் ஆண்டு சமர்ப்பித்த அறிக்கையின் மீது இதுவரை இஸ்ரேல் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.

Add Comment