அம்பேத்கர் படம்: தமிழக அரசு மீது வழக்கு!

டாக்டர் அம்பேத்கர் படத்தை தமிழில் வெளியிடுவது தொடர்பாக தமிழக அரசு மீது அதன் விநியோகஸ்தர் விஸ்வாஸ் சுந்தர் உயர்நீதிமன்றத்தில் Doxycycline No Prescription வழக்கு தொடர்ந்துள்ளார்.

சென்னையை சேர்ந்த விஸ்வாஸ் திரைப்பட நிறுவனத்தின் உரிமையாளர் சுந்தர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

இந்திய சுதந்திரத்துக்காக பாடுபட்ட சட்ட மேதை அம்பேத்கரின் சினிமா படத்தை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தப் படத்தை தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுவை மாநிலத்தில் வெளியிடுவதற்கு நான் வினியோக உரிமை பெற்றுள்ளேன்.

அதே நேரம் படத்திற்கான மொழி மாற்றம், ஊடக விளம்பரம் மற்றும் எடிட்டிங் பணிகளுக்கு ரூ.90 லட்சம் வரை செலவாகும். எனவே தமிழக அரசு ரூ.60 லட்சமும், புதுவை அரசு ரூ.30 லட்சமும் நிதி உதவி கொடுத்தால் படத்தை விரைவில் வெளியிட முடியும். அதற்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறியுள்ளார்.

இந்த வழக்கு நாளை நீதிபதி வெங்கட்ராமன் முன்பு விசாரணைக்கு வருகிறது.

Add Comment