இங்கிலாந்துக்கு இன்னிங்ஸ் வெற்றி* ஆஷஸ் கோப்பையை தக்கவைத்தது* ஆஸி., மீண்டும் பரிதாபம்

மெல்போர்ன் டெஸ்டில் அபாரமாக ஆடிய இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 157 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் ஆஷஸ் கோப்பையை தக்கவைத்துக் கொண்டது.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. முதல் 3 போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் 1-1 என சமநிலை வகித்தன. 4 வது போட்டி மெல்போர்னில் நடந்தது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 98, இங்கிலாந்து 513 ரன்கள் எடுத்தன. பின்னர் 2 வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி, மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்திருந்தது.

ஹாடின் ஆறுதல்: நேற்று நான்காவது நாள் ஆட்டம் நடந்தது. ஹாடின், சிடில் இணைந்து பொறுப்பாக ஆடினர். அதிரடியாக ஆடிய சிடில் 40 ரன்களுக்கு வெளியேறினார். மறுமுனையில் ஹாடின், டெஸ்ட் அரங்கில் 8 வது அரை சதம் கடந்தார். அடுத்த வந்த ஹில்பெனாஸ் “டக்’ அவுட்டானார். காயம் காரணமாக ஹாரிஸ், களமிறங்க வில்லை. 85.4 ஓவரில் “ஆல்-அவுட்டான’ ஆஸ்திரேலிய அணி, 258 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. ஹாடின் (55) அவுட்டாகாமல் இருந்தார். இங்கிலாந்து தரப்பில் பிரஸ்னன் 4, ஸ்வான் 2 விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருதை இங்கிலாந்தின் டிராட் தட்டிச் சென்றார். இவ்வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 2-1 என முன்னிலை பெற்றது.

24 ஆண்டுக்குப் பின்…: ஆஸ்திரேலிய மண்ணில், 24 ஆண்டுக்குப் பின் ஆஷஸ் கோப்பையை தக்கவைத்துக் கொண்டுள்ளது இங்கிலாந்து. இதற்கு முன் கடந்த 1986 ம் ஆண்டு ஆஸ்திரேலியா சென்ற மைக் கேட்டிங் தலைமையிலான இங்கிலாந்து அணி, தொடரை வென்று ஆஷஸ் கோப்பையை தக்கவைத்தது.

மீண்டும் வெற்றி: கடந்த முறை சொந்த மண்ணில் (2009) ஆஷஸ் தொடரை தன்சப்படுத்தியது இங்கிலாந்து (2-1). இந்த முறை ஆஸ்திரேலியாவில் 2-1 என முன்னிலை பெற்றுள்ள இங்கிலாந்து அணி, இனி தொடரை இழக்க வாய்ப்பு இல்லை. சிட்னியில் நடக்கும் (வரும் ஜன. 3) கடைசி டெஸ்டில், தோல்வி அடைந்தாலும் தொடர் “டிராவில்’ தான் முடியும். இதனால் ஆஷஸ் கோப்பையை இங்கிலாந்து தக்கவைத்துக் கொண்டுள்ளது.

படுதோல்வி
* டெஸ்ட் அரங்கில் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் தோல்வி பெறுவது, இது 7 வது முறை. இதில், இங்கிலாந்துக்கு எதிராக மட்டும் 6 முறை இன்னிங்ஸ் தோல்வி பெற்றுள்ளது.
* இத்தொடரின் 2 வது போட்டியில் (அடிலெய்டு) இன்னிங்ஸ், 71 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா தோல்வி அடைந்திருந்தது. தற்போது மெல்போர்ன் போட்டியில் இன்னிங்ஸ், 157 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி பெற்றுள்ளது. ஒரே டெஸ்ட் buy Viagra online தொடரின் 2 போட்டிகளில், இன்னிங்ஸ் தோல்வி பெறுவது ஆஸ்திரேலியாவுக்கு இது முதல் முறை.

பாண்டிங் பதவி தப்புமா?
பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, இதுவரை 2 முறை (2005, 2009) ஆஷஸ் தொடரை, இங்கிலாந்திடம் இழந்துள்ளது. இந்த முறையும் தோல்வியை எதிர்நோக்கி உள்ளது. ஒரு சிறந்த டெஸ்ட் கேப்டனுக்குரிய தகுதியை இழந்துள்ள பாண்டிங், பேட்டிங்கிலும் படுமட்டமாக செயல்பட்டு வருகிறார். கடந்த 4 டெஸ்ட் போட்டிகளில் வெறும் 113 ரன்கள் சேர்த்துள்ளார். கேப்டன் பதவியில் இருந்து, விரைவில் இவர் நீக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

“மீடியா’ விமர்சனம்
ஆஷஸ் தொடர் தோல்வி குறித்து ஆஸ்திரேலிய “மீடியா’, கடுமையாக சாடியுள்ளன. “டெய்லி டெலிகிராப்’ வெளியிட்டுள்ள செய்தியில்,”” ஆஷஸ் தொடரை இழந்து விட்டோம். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி “கந்தல் துணி’ போல ஆகி விட்டது. திறமையற்ற நிர்வாகிகள், குழப்பம் நிறைந்த அணித் தேர்வாளர்கள், பயிற்சியாளர்கள், “பார்ம்’ இல்லாத வீரர்களால் ஆஸ்திரேலிய அணி அழிவுப் பாதையில் பயணித்து வருகிறது,” என, செய்தி வெளியிட்டுள்ளது.

Add Comment