இந்தியா அசத்தல் வெற்றி!* டெஸ்ட் தொடரில் சமநிலை* ஸ்ரீசாந்த், ஜாகிர் அபாரம்

டர்பன் டெஸ்டில் ஜாகிர் கான், ஸ்ரீசாந்த் உள்ளிட்ட இந்திய பவுலர்கள் சாதித்துக் காட்டினர். இவர்களது வேகத்தில் அதிர்ந்து போன தென் ஆப்ரிக்க அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. இதையடுத்து டர்பன் மைதானத்தில் முதல் வெற்றியை பதிவு செய்த இந்தியா, டெஸ்ட் தொடரில் 1-1 என சமநிலையை எட்டியது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் தென் ஆப்ரிக்கா வென்றது. இரண்டாவது டெஸ்ட் டர்பனில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 205, தென் ஆப்ரிக்கா 131 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 228 ரன்கள் எடுத்தது. வெற்றிக்கு 303 ரன்கள் தேவை என்ற நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் நேர முடிவில் தென் ஆப்ரிக்க அணி தனது இரண்டாவது இன்னிங்சில், 3 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்திருந்தது.

ஸ்ரீசாந்த் அபாரம்:நேற்று நான்காவது நாள் ஆட்டம் நடந்தது. ஸ்ரீசாந்தின் “பவுன்சர்களில்’ தடுமாறிய காலிஸ், இடது மணிக்கட்டில் லேசான காயம் அடைந்தார். தென் ஆப்ரிக்க அணியின் நம்பிக்கை நாயகனாக கருத்தப்பட்ட இவர், 17 ரன்களில், ஸ்ரீசாந்த் பந்தில் அவுட்டாக, இந்திய வீரர்கள் உற்சாகமடைந்தனர். ஹர்பஜன் சுழலில் டிவிலியர்ஸ் (33) சிக்கினார்.

ஜாகிர் அசத்தல்:அனுபவ பவுச்சர் (1), ஜாகிர் கானின் வேகத்தில் அவுட்டானார். பின் வந்த ஸ்டைன் (10), ஹாரிசையும் (7) இவர் வெளியேற்ற இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமானது.

பிரின்ஸ் போராட்டம்: ஒன்பதாவது விக்கெட்டுக்கு இணைந்த பிரின்ஸ், மார்கல் ஜோடி, ஓரளவு சமாளித்து விளையாடியது. பிரின்ஸ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறு முனையில், அவ்வப்போது மார்கல் பவுண்டரி அடிக்க, ஸ்கோர் 200 ரன்களை தாண்டியது. மார்கல் (20), இஷாந்த் சர்மா வேகத்தில், தோனியிடம் “கேட்ச்’ கொடுத்து வெளியேறினார்.

இந்தியா வெற்றி:பின் வந்த டிசோட்சொபே(0) புஜாராவின் ” த்ரோவில்’ ரன் அவுட்டானார். இரண்டாவது இன்னிங்சில் 215 ரன்களுக்கு ஆல் அவுட்டான தென் ஆப்ரிக்க அணி, 87 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. போராடிய பிரின்ஸ், அதிகபட்சமாக 39 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். ஆட்ட நாயகன் விருதை, லட்சுமண் தட்டிச் சென்றார்.
டர்பன் மைதானத்தில் முதன் முறையாக வெற்றியை பதிவு செய்த இந்திய அணி, டெஸ்ட் தொடரை 1-1 என்று சமன் செய்தது. இரு அணிகள் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, வரும் ஜன. 2ம் தேதி கேப்டவுனில் துவங்குகிறது.

கடைசி வாய்ப்பு
இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் இடையிலான ஒரே ஒரு “டுவென்டி-20′ வரும் ஜன. 9ல் நடக்கிறது. ஜோகன் போத்தாவை கேப்டனாக கொண்ட, தென் ஆப்ரிக்க அணியில், கடந்த மாதம் சர்வதேச போட்டிகளில் இருந்து, ஓய்வு பெறுவதாக அறிவித்த நிடினி இடம் பெற்றார். இது இவருக்கு கடைசி வாய்ப்பாகும். தவிர, பாகிஸ்தானுக்கு எதிரான “டுவென்டி-20′ போட்டியில் அசத்திய ஆம்லா, போஸ்மெனும் அணியில் இடம் பெற்றுள்ளனர். காலிஸ், ஸ்டைன், மார்கல் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது.

“ஹாட்ரிக்’ தோல்வி
டர்பன், கிங்ஸ்மிட் மைதானத்தில் கடந்த 2008-09ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 175 ரன்கள் மற்றும் இங்கிலாந்துடன் (2009) 98 ரன்கள் வித்தியாசத்தில், தென் ஆப்ரிக்க அணி தோற்று இருந்தது. தற்போது இந்தியாவுக்கு எதிராகவும் (87 ரன்கள்) தோற்று, தென் ஆப்ரிக்க அணி “ஹாட்ரிக்’ தோல்வியை பதிவு செய்தது.

இரண்டாவது Buy Viagra Online No Prescription வெற்றி
தென் ஆப்ரிக்க மண்ணில், இதற்கு முன் இந்திய அணி பங்கேற்ற 13 போட்டிகளில் 8ல் தோல்வியடைந்தது. 4 போட்டிகள் “டிரா’ ஆனது. கடந்த 2006 தொடரில், டிராவிட்டின் இந்திய அணி மட்டும், ஒரே ஒரு போட்டியில் (ஜோகனஸ்பர்க்) வென்று இருந்தது. தற்போது தோனி தலைமையிலான இந்திய அணி, இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

ஆணவத்துக்கு “அடி’
முதல் டெஸ்டில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், “”இந்திய அணியால் தென் ஆப்ரிக்க அணியின் 20 விக்கெட்டை வீழ்த்த முடியாது. அதற்கான திறமை இல்லை. டர்பன் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி, தொடரை வென்று, கோப்பையை உறுதி செய்வோம் என, தென் ஆப்ரிக்க அணியின் ஆம்லா, கேப்டன் ஸ்மித் உள்ளிட்ட பலர் ஏளனமாக பேசினர். இதனால் இந்திய அணியின் “நம்பர்-1′ இடம் கேள்விக்குறியாகும் அபாயம் இருந்தது. ஆனால் டர்பனில் எழுச்சி கண்ட இந்திய வீரர்கள், அபார வெற்றிபெற்று, ஆணவத்துக்கு பதிலடி கொடுத்தனர்.

லட்சுமண்-ஜாகிர் ராசி
கடந்த 2006ல் ஜோகனஸ்பர்க் டெஸ்டில், 2வது இன்னிங்சில் இந்திய அணி 148/7 என்ற நிலையில் ஜோடி சேர்ந்த லட்சுமண் (73), ஜாகிர் கான் (37) ஜோடி, 8வது விக்கெட்டுக்கு (218/8) 70 ரன்கள் சேர்த்தது. இப்போட்டியில் இந்தியா வென்றது. தற்போது டர்பனில் 148/7 என்ற நிலையில், இரண்டாவது இன்னிங்சில் மீண்டும் ஜோடி சேர்ந்த லட்சுமண் (96), ஜாகிர் கான் (27) ஜோடி, 8வது விக்கெட்டுக்கு 70 ரன்கள் சேர்க்க (218/8), அணிக்கு வெற்றியும் கிடைத்துள்ளது

ஜாகிர் கானுக்கு தோனி பாராட்டு
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் வெற்றி பெற, ஜாகிர் கானின் அனுபவம் உதவியதாக, இந்திய அணி கேப்டன் தோனி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தோனி கூறியது:
முதல் டெஸ்ட் தோல்விக்குப் பின் பேட்டிங்கில் லேசான முன்னேற்றம் அடைந்தோம். ஆனால், 20 விக்கெட் வீழ்த்தும் திறமை குறித்து, எங்களுக்கு லேசான கவலை இருந்தது. தற்போது, பவுலிங்கில் எழுச்சி கண்டது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. சமீப காலமாக இந்தியாவின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் கான் தான் என, எப்போதும் சொல்லி வருகின்றேன். இதை இவர் மீண்டும் (6 விக்.,) நிரூபித்தார். இவரது அனுபவத்தால் மற்ற பவுலர்களும் சிறப்பாக செயல்பட்டனர். அதேபோல, கடந்த 10 ஆண்டுகளாக, சுழலில் அசத்தி வருபவர் ஹர்பஜன். தொடர்ந்து நீண்ட நேரம் பவுலிங் செய்யும், இவரை அணியில் பெற்றது பெரிய விஷயம்.
“டிரிங்ஸ்’ இல்லை:
டர்பன் ஆடுகளம் ஏற்கனவே கணித்தபடி சரியாக இருந்தது. முதல் இன்னிங்சில் 200 ரன்கள் எடுத்தாலே, அதிகம் என்ற நிலையில், 74 ரன்கள் முன்னிலை பெற்றோம். பின் 2வது இன்னிங்சில் பேட்டிங்கில் சற்று முன்னேற்றம் அடைந்தோம். தொடர்ந்து, இதேபோல கேப் டவுன் டெஸ்டிலும், பேட்டிங்கில் நன்கு செயல்பட்டு, வெற்றி பெற முயற்சிப்போம். புத்தாண்டை முன்னிட்டு, இங்கு அதிகம் “ஷாப்பிங்’ செய்ய உள்ளோம். தவிர, பார்ட்டிகளிலும் கலந்து கொள்வோம். ஆனால், டிரிங்ஸ் அருந்த மாட்டோம்.
இவ்வாறு தோனி கூறினார்.

ஸ்கோர் போர்டு
முதல் இன்னிங்ஸ்
இந்தியா 205
தென் ஆப்ரிக்கா 131

இரண்டாவது இன்னிங்ஸ்
இந்தியா 228

தென் ஆப்ரிக்கா
ஸ்மித்(கே)தோனி(ப)ஸ்ரீசாந்த் 37 (38)
பீட்டர்சன்(கே)புஜாரா(ப)ஹர்பஜன் 26(45)
ஆம்லா(கே)தோனி(ப)ஸ்ரீசாந்த் 16(16)
காலிஸ்(கே)சேவக்(ப)ஸ்ரீசாந்த் 17(52)
டிவிலியர்ஸ்-எல்.பி.டபிள்யு.,(ப)ஹர்பஜன் 33(76)
பிரின்ஸ்-அவுட் இல்லை- 39(108)
பவுச்சர்-எல்.பி.டபிள்யு.,(ப)ஜாகிர் 1(6)
ஸ்டைன்(ப)புஜாரா(ப)ஜாகிர் 10(24)
ஹாரிஸ்(ப)ஜாகிர் 7(28)
மார்கல்(கே)தோனி(ப)இஷாந்த் 20(47)
டிசோட்சொபே-ரன் அவுட்-(புஜாரா) 0(2)
உதிரிகள் 9
மொத்தம் (72.3 ஓவரில் ஆல் அவுட்) 215
விக்கெட் வீழ்ச்சி: 1-63 (ஸ்மித்), 2-82 (பீட்டர்சன்), 3-82 (ஆம்லா), 4-123(காலிஸ்), 5-136(டிவிலியர்ஸ்), 6-143(பவுச்சர்), 7-155(ஸ்டைன்), 8-182(ஹாரிஸ்), 9-215(மார்கல்), 10-215(டிசோட்சொபே).
பந்து வீச்சு: ஜாகிர் 17-3-57-3, இஷாந்த் 11.3-0-36-1, ஸ்ரீசாந்த் 14-2-45-3, ஹர்பஜன் 29-5-70-2, சச்சின் 1-0-6-0.

Add Comment