முபாரக் ஜமாஅத் சார்பாக நடைபெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி!

சினிமா சீரழிவுகளிலும் சங்கங்களிலும் ஆபாச இண்டர்நெட்டிலும் பொழுதை
கழித்துக் கொண்டிருக்கும் இளைய சமுதயதினருக்கு இஸ்லாமிய மார்க்க
சிந்தனையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ஷபா அணி என்றும் மர்வா அணி என்றும் இஸ்ரா அணி என்றும் மெஹ்ராஜ் Buy Bactrim அணி என்றும் நான்கு அணிகளாக பிரிக்கப்பட்டு மாணவர்களிடத்தில் இஸ்லாமிய மார்க்க சம்பந்தமான கேள்விகள் கேட்கப்பட்டு மாணவர்களே பதில் சொல்லகூடிய ஒரு வித்தியாசமான நிகழ்ச்சி 26-12-2012 (புதன்கிழமை) அன்று மஸ்ஜித் முபாரக் ஜமாஅத் சார்பாக முபாரக் பள்ளி அருகில் நஜாஹ் நர்சரியில் வைத்து நடைபெற்றது.

முபாரக் பள்ளிவாசல் நிர்வாக கமிட்டி தலைவர் க.அ. சேகுதுமான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முன்னதாக மௌலவி  பசீர் அஹ்மத் உமரி அவர்கள் தொடக்க உரையாற்றினார்கள். பின்பு மௌலவி முஹிப்புல்லாஹ் உமரி மௌலவி அவர்கள் மாணவர்களிடம் இருக்க வேண்டிய பண்புகள் பற்றி சிற்றுரையாற்றினார்கள். பின்பு மவ்லவி S .S .U. சைபுல்லாஹ் ஹாஜா  பைஜி தொழுகை செயல் முறை விளக்கம் அளித்த்துடன் மார்க்கம் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தெளிவாக பதிலளித்தர்கள்.

கலாச்சார சிரழிவுகளுக்கு மத்தியில் இஸ்லாமிய மார்க்க அறிவை வளர்க்க
இப்படி ஒரு நிகழ்ச்சியா? என மாணவர்கள் வியப்பூட்டும் அளவுக்கு நடைபெற்றது. இன்னும் சொல்லப்போனால் இது போன்ற நிகழ்ச்சி எப்போது
நடத்துவார்கள் என அதிகமான மாணவர்கள் ஆவலோடு கலைந்து சென்றனர்.

Add Comment