சிறுபான்மை இன மக்களுக்கு பாதுகாவலாக இருப்பேன்: ஜெ., உறுதி

Buy cheap Ampicillin justify;”>சிறுபான்மை இன மக்களுக்கு பாதுகாவலாக இருப்பேன்’ என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரது அறிக்கை: கருணாநிதி 2006ல் முதல்வராக பொறுப்பேற்ற பின்தான், “தமிழ்நாடு கட்டாய மதமாற்ற தடைச்சட்டம்’ நீக்கப்பட்டது என ஒரு தவறான செய்தி பிரபல நாளிதழ்கள் சிலவற்றில் வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கு கடும் கண்டனத்தை தெரிவிக்கிறேன். “தமிழ்நாடு கட்டாய மதமாற்ற தடைச்சட்டம்’ கடந்த 2004 மே 18ம் தேதி எனது தலைமையிலான அரசு பிறப்பித்த அவசரச் சட்டத்தின் மூலம் அறவே ரத்து செய்யப்பட்டது. இது குறித்து நானும் பல முறை மக்களுக்கு தெளிவுபடுத்தி உள்ளேன். நடைமுறையில் உள்ள ஒரு சட்டம், ஓர் அவசர சட்டத்தின் வாயிலாக ரத்து செய்யப்பட்ட பிறகு, அந்த அவசர சட்டத்திற்கு சட்டசபை அனுமதி பெறப்படாவிட்டாலும் கூட, அவசரச் சட்டத்தின் மூலம் ரத்தான சட்டம் தொடர்ந்து ரத்தானதாகவே இருக்கும்; மீண்டும் உயிர் பெறாது. இதுதான் சட்ட நிலைபாடு.

சட்டசபைக்கு வந்தால் தான் ரத்தாகும் என்றில்லை. இது, 1985ல் சுப்ரீம் கோர்ட்டின் ஐந்து நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பிலும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து ஏற்கனவே, நான் முதல்வராக இருந்த போது 2005 மே 21 அன்று தெளிவுபட அறிக்கையின் மூலமும், 2006 சட்டசபை தேர்தலின் போதும், அதற்கு பின்பும் பல சூழ்நிலைகளில் தெரிவித்திருக்கிறேன். எனவே, அ.தி.மு.க.,வும், நானும், என்றைக்கும் சிறுபான்மை இன மக்களுக்கு உறுதுணையாக, பாதுகாவலனாக இருப்போம். கருணாநிதி ஆட்சி 2006ல் அமைந்த பிறகு, இந்த அவசரச் சட்டத்தை மீண்டும் சட்டசபைக்கு கொண்டு வந்து, அதை அவரது அரசு தான் ரத்து செய்தது என கூறுவது, ஏற்கனவே, ஒருவரால் கொல்லப்பட்டு, புதைக்கப்பட்ட ஒரு பிரேதத்தை தோண்டி வெளியே எடுத்து, மீண்டும் அதில் வேலை பாய்ச்சி, நான் தான் கொன்றேன் என கூறுவதற்கு சமம். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

Add Comment