வீடு தேடிவரும் தமிழக அரசின் உதவித் தொகை

பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்களை கண்டறிந்து, வீடுகளுக்கே விண்ணப்பங்களை அனுப்பி, உதவித்தொகை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இணை இயக்குனர்கள் ஜெயச்சந்திரன், சேகர் ஆகியோர் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்களுடன் வீடியோ கான்பரன்சிங் முறையில், பதிவு, வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்குதல் குறித்து ஆலோசனை நடத்தினர். வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்தில், அதிக அக்கறை எடுக்கவும், இன்னும் அதிகம் பேருக்கு உதவித்தொகை வழங்கவும் அறிவுரை வழங்கினர். சமீபத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்து பதிவு செய்தவர்களுக்கும், மாதம் 100 ரூபாய் உதவித்தொகை வழங்க அரசு உத்தரவிட்டது. இத்திட்டம் அறிவிக்கப்பட்டு சில மாதங்கள் ஆகியும், யாரும் ஆர்வம் காட்டவில்லை. உதவித்தொகை கேட்டு விண்ணப்பம் செய்வோர் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. இந்த எண்ணிக்கையை buy Doxycycline online அதிகப்படுத்தவும், 10ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெறாதவர்களை கண்டறியவும், அவர்களின் வீடுகளுக்கே விண்ணப்பங்களை அனுப்பி, பூர்த்தி செய்து பெறவும் அறிவுறுத்தப்பட்டது.

Add Comment