கடையநல்லூரில் ரேஷன் கார்டுகளில் புதிய இன்னர் ஸ்லிப் ஓட்டும் பணி இன்று முதல் தொடக்கம் !

தமிழகத்தில்  உள்ள அணைத்து குடும்ப அட்டைகளும் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன.இதனை புதுப்பிக்கும் விதமாக தமிழகத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் உள்ள அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் உள்பக்கமாக புதிய ஸ்லிப் அதாவது இந்த வருடத்திற்கான பொருட்களை வாங்குவதற்கான பதிவுத் தாள் ஓட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ரேஷன் கார்டுகள் கடைசியாக கடந்த 2005ம் ஆண்டு வழங்கப்பட்டன. இது 2009ம் ஆண்டு வரை செல்லத்தக்கதாக இருந்தது. Buy cheap Viagra அதன் பின் பயோ மெட்ரிக் ரேஷன் கார்டுகள் வழங்குவதற்காக பணி துவங்கப்பட்டது. இதற்காக கடந்த சில ஆண்டுகளில் ரேஷன் கார்டுகளில் உள்தாள் ஒட்டப்பட்டு, ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில், பயோ மெட்ரிக் ரேஷன் கார்டு பணிகள் முடியாததால், இந்த ஆண்டும் உள்தாள் ஒட்ட அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான பணிகள் இன்று துவங்கின. ரேஷன் கார்டை குடும்ப தலைவர் அல்லது கார்டில் உள்ள குடும்ப உறுப்பினர் சம்பந்தப்பட்ட கடைகளுக்குச் சென்று புதுப்பிக்கலாம். இந்த பணிகள் வரும் பிப்ரவரி மாதம் வரை நடக்கும் என கூறப்பட்டுள்ளது.

Add Comment