கடையநல்லூரில் துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர்கள் மீது லாரிகளை ஏற்றி கொலை செய்ய முயற்சி!

கடையநல்லூரில் அனுமதியின்றி மணல் மற்றும் சரள் ஏற்றி வந்த டிப்பர்
லாரிகள், நான்கு டிராக்டர்களை நிறுத்த முயன்ற மண்டல துணை தாசில்தார்,
வருவாய் ஆய்வாளர்கள் மீது லாரிகளை ஏற்றி கொலை செய்ய முயற்சித்ததாக வழக்கு
பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடையநல்லூர் மற்றும் சுற்றுப் பகுதிகளில் மணல் கடத்தல் கடந்து வருவதாக
வருவாய்த்துறைக்கு தகவல் கிடைத்தது. பகலில் அனுமதி சீட்டினை வைத்துக்
கொண்டு இரவு நேரங்களில் மணல் அதிகளவில் எடுத்து செல்வதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து கலெக்டர் உத்தரவின் பேரில் தென்காசி ஆர்டிஓ ராஜகிருபாகரன்
ஆலோசனையின்படி தாசில்தார் தேவபிரான் உத்தரவின்படி கடையநல்லூரில் மண்டல
துணை தாசில்தார் ஆதிநாராயணன், வருவாய் ஆய்வாளர் சுப்பிரமணியன் மற்றும்
வருவாய்த்துறையினர் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர்.

சொக்கம்பட்டி, கண்மணியாபுரம், வலசை, கடையநல்லூர் ஆகிய பகுதிகளில் வாகன
சோதனையில் ஈடுபட்டிருந்த போது சரள் ஏற்றி வந்த இரண்டு டிப்பர்
லாரிகளையும், மணல் ஏற்றி வந்த மூன்று டிராக்டர்கள் மற்றும் கல் ஏற்றி
வந்த டிராக்டர் ஒன்றையும் வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்து
சொக்கம்பட்டி, கடையநல்லூர் போலீஸ் ஸ்டேஷன்களில் ஒப்படைத்தனர்.

இதனிடையில் காசிதர்மம் பகுதியை சேர்ந்த வேல் மகன் தங்கையா மணல் ஏற்றிவந்த
டிராக்டரை நிறுத்திய போது மண்டல துணை தாசில்தார் Buy cheap Amoxil ஆதிநாராயணன், வருவாய்
ஆய்வாளர் சுப்பிரமணியன் ஆகியோர் மீது டிராக்டர் ஏற்றி கொலை செய்ய முயற்சி
செய்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து
விசாரணை நடத்தி வருகின்றனர்.

Add Comment