ஆப்கானில் நேட்டோ ராணுவத்தினர் 12 கொல்லப்பட்டனர்

காபூல்:ஆப்கானில் கடந்த 24 மணிநேரத்தில் அந்நிய ஆக்கிரமிப்பு நேட்டோ படையினர் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஏழு அமெரிக்கர்கள், இரண்டு ஆஸ்திரேலியர்கள், ஒரு பிரஞ்சுநாட்டைச் சார்ந்தவர் உள்ளிட்டோர் கொல்லப்பட்டவர்களில் அடங்குவர்.

தெற்கு ஆப்கானில் நேற்று நடந்த குண்டுவீச்சில் இரண்டு ராணுவத்தினர் மரணமடைந்தனர். நேட்டோவின் சர்வதேச பாதுகாப்பு துணைப்படை இதனை உறுதிச்செய்துள்ளது.

இந்த வருடம் அதிக எண்ணிக்கையில் நேட்டோ ராணுவத்தினர் கொல்லப்படுவது இதுதான் முதல் முறையாகும். ஆறு அமெரிக்க ராணுவத்தினர் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட பொழுது ஒருவர் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டார்.

உருஸ்கான் மாகாணத்தில் ரோந்துச் சென்றுக் கொண்டிருந்தபொழுது கண்ணிவெடியில் சிக்கி இரண்டு ஆஸ்திரேலிய நாட்டவர் மரணமடைந்தனர். கிழக்கு மாகாணத்தில் Buy Amoxil Online No Prescription நடந்த ராக்கெட் தாக்குதலில் தங்களுடைய நாட்டு ராணுவ வீரன் இறந்துபோனதாக பிரான்சு அறிவித்துள்ளது.

நேற்று முன் தினம் காந்தஹாரில் தெற்கு நகரத்தின் ஆப்கான் போலீஸ் பயிற்சி மையத்தின் மீது நடந்த தாக்குதலில் கொல்லப்பட்ட அயல்நாட்டு காண்ட்ராக்டரில் ஒருவர் அமெரிக்கர் என அமெரிக்க தூதரகம் உறுதிச்செய்துள்ளது.

அந்நிய நாட்டு படையினர் ஆப்கானிலிருந்து வெளியேறும் வரை சமாதானத்தை உருவாக்க இயலாது என தாலிபான் கடந்த வாரம் கூறியிருந்தது.

Add Comment