கல்வி,வேலை வாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க இ.யூ.முஸ்லிம் லீக் வலியுரறுத்தல்

கல்வி,வேலைவாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீட்டை வழங்கவேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி அனைத்து மாநில தலைநகர் களிலும் கவன ஈர்ப்பு பேரணிகளை நடத்துவது என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய நிர்வாக குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

இந்திய யூனியன் முஸ்லிம்லீக் தேசிய நிர்வாகக்குழுகூட்டம் 01-01-2013 செவ்வாய்காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் buy Bactrim online உள்ள ஹோட்டல் அபுபேலஸில் நடைபெற்றது. இந்திய யூனியன் முஸ்லிம்லீகின் தேசிய தலைவரும் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சருமான இ.அஹமது சாகிப் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன், தேசிய பொருளாளரும் கேரள அமைச்சருமான பி.கே. குஞ்ஞாலி குட்டி, துணைத் தலைவர் தஸ்தகீர் இப்ராகிம் ஆகா, தேசிய செயலாளர்கள் இ.டி. முகம்மதுபஷீர் எம்.பி, அப்துஸ் ஸமத் சமதானி எம்.எல்.ஏ, டெல்லிகுர்ரம் அனீஸ் உமர், பீகார் நயீம் அக்தர், தேசிய துணைச் செயலாளர்கள் நாக்பூர் ஷமீம் சாதிக், லக்னோ டாக்டர் மத்தீன்,ஆம்பூர் அப்துல் பாசித் (முன்னாள் எம்.எல்.ஏ), இளைஞர்அணி பி.கே. ஃபெரோஸ், தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், மாநில செயலாளர்கள் காயல் மகபூப், கமுதிபஷீர், திருப்பூர் சத்தார்,வழக்கறிஞர் ஜீவகிரிதரன்,சுதந்திர தொழிலாளர் யூனியன் மாநிலச் செயலாளர் கே.எம். நிஜாமுதீன், பேங்காக் காயிதெமில்லத் பேரவை அமைப்பாளர் வாவு சம்சுதீன், டைம்ஸ் ஆஃப் லீக் துணை ஆசிரியர் கே.டி.கிஸர் முகம்மது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு..

முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு

இந்திய நாட்டில் சிறுபான்மைசமுதாயங்கள் 18 சதவீதம்உள்ளனர். இவர்களில் பெரும்பான்மையாக அதாவது 13.5 சதவீதம் முஸ்லிம்களாவர்.கல்வி, வேலைவாய்ப்பி ல்மிகவும் பின்தங்கியுள்ள முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கவேண்டுமென நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா, நீதியரசர் ராஜேந்திர சச்சார்ஆணையங்கள் பரிந்துரைத்தன. இந்த இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என மத்தியஅரசு உறுதி அளித்திருந்தது.ஆயினும், இதுவரை இந்த உறுதிமொழி வழங்கப்படாதது மிகுந்த வருத்தத்தை தருகிறது.எனவே முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டுமென மத்திய அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது. இக்கோரிக்கையை நிறைவேற்றகோரி அனைத்து மாநில தலை நகர்களிலும் மார்ச் மாத இறுதியில் கவன ஈர்ப்பு பேரணிகளை இந்திய யூனியன் முஸ்லிம்லீக் சார்பில் நடத்துவ தென இக்கூட்டம் முடிவு செய்கிறது.

COUNCIL MEETING

டெல்லியில்இந்திய யூனியன்முஸ்லிம் லீக் பயிரலங்கம்

இந்திய யூனியன் முஸ்லிம்லீக் அனைத்து மாநில நிர்வாகிகள், மாவட்ட மற்றும் பிரைமரி நிர்வாகிகள், இளைஞர் அணி,மாணவர் பேரணி, மகளிர் அணி,தொழிலாளர் யூனியன் உள்ளிட்டசார்பு அமைப்புகளின் நிர்வாகிகள், முன்னணியினர் பங்கேற்கும் பயிலரங்கம் எதிர்வரும் மார்ச் 9,10 தேதிகளில் புதுடெல்லியில் நடத்துவதென இக்கூட்டம் முடிவு செய்கிறது.

அமைப்புப் பணிகளைதீவிரப்படுத்த குழுக்கள்

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகை பலப்படுத்துவதற்காக 3 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அதற்காக குழுக்களை அமைப்பது என்றும் இக் கூட்டம் முடிவுசெய்கிறது. இதன்படி, மேற்கு வங்கம்,அஸ்ஸாம், ராஜஸ்தான், ஜார்கண்ட் மாநிலங்கள் அடங்கிய மண்டலத்திற்கு தேசிய செயலாளர் இ.டி. முஹம்மது பஷீர்எம்.பி, தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் ஆகியோரும். மஹாராஷ்டிரா, குஜராத்,மத்தியப் பிரதேசம், ஆந்திரபிரதேசம், கோவா மாநிலங்கள் அடங்கிய மண்டலத்திற்கு காயிதெ மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளர் எம். அப்துர் ரஹ்மான் எம்.பி,தேசிய துணைச் செயலாளர் அப்துல் பாசித், தேசிய துணைத்தலைவர் தஸ்தகீர் இப்ராஹிம்ஆகா ஆகியோரும் ,உத்தரப்பிரதேசம், பீகார்,உத்தரகாண்ட், டெல்லி, பஞ்சாப்ஆகிய மாநிலங்கள் அடங்கிய மண்டலத்திற்கு தேசிய செயலாளர் குர்ரம் அனீஸ் உமர்,தேசிய துணைத் தலைவர் இக்பால் அஹமது, தேசிய செயலாளர் நயீம் அக்தர் ஆகியோரும்,கர்நாடக மாநிலத்திற்கு தேசிய பொதுச் செயலாளர்பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் அவர்களும் கொண்ட குழு நேரில் ஆய்வு செய்து கேரளம், தமிழகத்தைப் போன்று அமைப்புப் பணிகளை தீவிரப்படுத்தவும், நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி தேர்தலைகளை குறித்து ஆய்வு செய்துஅறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமெனவும் இக்கூட்டம் முடிவுசெய்கிறது.

IUML WITH KALAINGAR

தலைமை நிலையநிர்வாக செயலாளர்நியமனம்

இந்திய யூனியன் முஸ்லிம்லீகின் தலைமை நிலைய நிர்வாக செயலாளராக கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் அவர்களை நியமிப்பது என்று இக்கூட்டம் முடிவு செய்கிறது.

தகவல்,
க.கா.செ.
கடையநல்லூர்

Add Comment