கோல்கத்தாவில் அகில இந்திய முஸ்லிம் இளைய தலைவர்கள் மாநாடு

பிப்ரவரி 9 – 2013 அன்று மேற்குவங்கம் – கோல்கத்தாவில் அகில இந்திய முஸ்லிம் இளைய தலைவர்கள் மாநாடு : முஸ்லிம் யூத் லீக் (MYL )

iuml1கடந்த டிசம்பர் – 2 அன்று கோழிக்கோட்டில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய கவுன்சில் கூட்டத்தில் எடுத்த முடிவின் அடிப்படையில் ,நேற்று ஜனவரி 5 – 2013 அன்று மும்பையில் முஸ்லிம் யூத் லீக் அமைப்புக் குழு கூட்டம் தேசிய யூத் லீக் அமைப்பாளர் பி.கே.பெரோஸ் தலைமையில் ,மகாராஸ்டிரா மாநில IUML நிர்வாகிகள் முன்னிலையில் நடந்தது .அக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1.இன்ஷாஅல்லாஹ் ,எதிர்வரும் பிப்ரவரி 9 – 2013 அன்று மேற்குவங்கம் – கோல்கத்தாவில் அகில இந்திய முஸ்லிம் இளைய தலைவர்கள் சந்திப்பு மாநாடு நடத்துவது .

2.தமிழ்நாடு , கர்நாடகா , புதுச்சேரி , மகாராஷ்டிரா , உத்தர்பிரதேஷ் , டெல்லி , மேற்குவங்கம் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் மார்ச் 10 – 2013 – க்கு முன்பாக முஸ்லிம் யூத் Buy cheap Lasix லீக் நிர்வாகிகள் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் .

3.எதிர்வரும் ஏப்ரல் 7 – 2013 அன்று உத்திர பிரதேசத்தில் முஸ்லிம் யூத் லீக் தேசிய பிரதிநிதிகள் மாநாடு நடத்துவது ,

4.அனைத்து மாநிலங்களிலும் நடைபெறும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பேரணி மற்றும் மாநாடுகளை வெற்றி பெறச்செய்ய அயராது பாடுபடுவது .

5.எதிர்வரும் செப்டம்பர் 28 – 2013 அன்று முஸ்லிம் யூத் லீக் தேசிய மாநாடு நடத்துவது

உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் முஸ்லிம் யூத் லீக் தேசிய அமைப்புக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் .

தகவல் : அபு ஆஸிமா

Add Comment