புரோட்டினும் முக்கியத்துவமும்

புரோட்டின் எனும் சொல்லுக்கு முதன்மையானது, அடிப்படையானது என்பது பொருள். எதற்கு முதன்மையானது? எதற்கு அடிப்படையானது? என்றால் உடம்பின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது, முதன்மையானது.

புரோட்டினைப் புரதம் என்று கூறுவர். புரோட்டின் உடல் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானதாகும். மேலும் அன்றாடம் உடலில் ஏற்படுகிற தேய்வுக் கழிவுகளை நிரப்பி, உடலை நல்ல நிலையில் வைக்கிறது.

இதுதவிர, சில நோய்கள் வராதபடி புரோட்டின் தடுக்கிறது. உம்புக்குச் சக்தி தருகிறது. தோல், சதை, ஜவ்வு முதலியவைகளின் அணுக்களை வளர்த்து அவைகளை உறுதிப்படுத்துகிறது.

குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்குப் புரோட்டின் மிகவும் அவசியமானதாக உள்ளது. ஆதலால் உணவில் புரோட்டின் முதன்மைப் பொருளாக அமைகிறது. ஆகவே, புரோட்டின் சத்து என்பது உடம்பிற்கு தினமும் தேவைப்படும் ஒரு இன்றியமையாத சத்தாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Ampicillin online justify;”>தானியங்கள், பருப்புகள், காய்கறிகள், இறைச்சி முதலியவற்றில் புரோட்டின் சத்து உள்ளது. ஆனால், தாவரப் பொருட்களில் இருந்து கிடைக்கும் புரோட்டினை விட இறைச்சிகளில் இருந்து கிடைக்கும் புரோட்டின் சிறந்தது. அதனால், தாவரப் புரோட்டின் தேவையில்லை என்று கருதக்கூடாது. இரண்டுமே உடலிற்கு அவசியமானதுதான்.

தாவர வகைகளில் சோயா பீன்ஸில்தான் அதிக அளவில் புரோட்டின் இருக்கிறது. 100 கிராம் சோயா பீன்ஸில் 43 கிராம் புரோட்டின் கிடைக்கிறது. இறைச்சியில் இருந்து கிடைக்கக்கூடிய புரோட்டின் சத்துவிற்கு இணையாக சோயா பீன்ஸில் மட்டும்தான் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பால், தயிர், மோர், முட்டை, இறைச்சி, ஈரல், மீன் முதலியவைகளில் இருக்கும் புரோட்டின் சிறந்ததாகும். வளரும் குழந்தைகளுக்கு பாலும், முட்டையும் சிறந்த உணவாக இருக்கும்.

கோதுமை, சோளம், கம்பு, கேழ்வரகு, அரிசி முதலிய தானியங்களில் புரோட்டின் சத்து உண்டு. மேலும், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, பச்சைப்பருப்பு, துவரம் பருப்பு, பட்டாணி, அவரைக்கொட்டை, பீன்ஸ் கொட்டை, மொச்சைக்கெட்டை முதலிய பருப்பு வகைகளிலும் புரோட்டின் உண்டு.

இதுதவிர, முந்திரிப் பருப்பு, வாதுமைப் பருப்பு, நிலக்கடலை, அக்ரூட் பருப்பு முதலியவைகளிலும் புரோட்டின் சத்து உள்ளது.

கிழங்கு வகைகளில் உருளைக்கிழங்கு, கேரட் கிழங்கு, பீட்ரூட் முதலியவைகளிலும் புரோட்டின் சிறிதளவு உள்ளது.

Add Comment