இணையதளம் மூலம் மின் கட்டணம் செலுத்துவது எப்படி?தமிழகம் முழுதும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது

சென்னைBuy Lasix style=”font-size: small;”>, கோவை மண்டலத்தில், ஆன்லைன் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி கடந்த 1ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும், பலருக்கு இணைய தளத்தில் மின் கட்டணம் செலுத்தும் வழிமுறைகள் தெரிவதில்லை. இதுகுறித்து, திருப்பூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வைபொறியாளர் நிர்மலதா வெளியிட்டுள்ள அறிக்கை: www.tneb.in என்ற இணைய தளத்தில் சென்று,

billing services என்ற தலைப்புக்குள் online bill payment என்ற உபதலைப்பை கிளிக் செய்து மின்கட்டண நுழைவாயில் (internet payment gateway)படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து மின்கட்டணத்தை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி பண அட்டை மூலமாகவோ, அனைத்து மாஸ்டர்/விசா கடன் அட்டைகள் மூலமாகவோ இந்த இணைய தளத்தில் செலுத்தலாம் . இணைய தள வணிக சேவை மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதி ஆக்சிஸ், ஐசிஐசிஐ, சிட்டி யூனியன், ஐஓபி, இந்தியன் வங்கிகளில் உள்ளது.

வீடு மற்றும் கடைகளுக்கான மின் கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்துவதற்கான வசதியை மேலும் சில வங்கிகளுக்கு விரிவாக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து வேலூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் லீலாவதி விடுத்துள்ள செய்திக்குறிப்பு: குறைந்த அழுத்த மின் இணைப்பு பெற்றுள்ள வீடுகள் மற்றும் கடைகளுக்கு மின் கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தும் வசதி கடந்த டிசம்பர் மாதம் 1ம் தேதி முதல் தமிழகம் முழுதும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது ஆக்சிஸ் வங்கி
, ஐசிஐசிஐ, இந்தியன் வங்கி, சிட்டி யூனியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் கனரா வங்கிகள் மூலம் மின்கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த முடியும். மேலும் கூடுதலாக பல வங்கிகளை இத்திட்டத்தில் இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆகவே, மின்கட்டணத்தை www.tneb.in என்ற இணையதளம் மூலம் நுகர்வோர்கள் எளிதில் கட்டலாம்

Add Comment