ஐ.சி.சி., ரேங்கிங்: லட்சுமண், ஜாகிர் முன்னேற்றம்

ஐ.சி.சி., டெஸ்ட் வீரர்களுக்கான ரேங்கிங் பட்டியலில் லட்சுமண், ஜாகிர் buy Levitra online கான் உள்ளிட்ட இந்திய வீரர்கள் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர்.
டெஸ்ட் அரங்கில் சிறந்த வீரர்களுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் நேற்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில் இந்தியாவின் லட்சுமண், 9வது இடத்துக்கு முன்னேறினார். இதன்மூலம் இவர் முதன்முறையாக “டாப்-10′ வரிசையில் இடம் பிடித்தார். இதற்கு டர்பன் டெஸ்டின் 2வது இன்னிங்சில் 96 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டதே காரணம். சச்சின் (2வது), சேவக் (4வது) உள்ளிட்ட மற்ற இந்திய வீரர்கள் தங்கள் இடத்தை தக்க வைத்துக் கொண்டனர். முதலிடத்தில் இலங்கை கேப்டன் சங்ககரா நீடிக்கிறார். டர்பன் டெஸ்டில் ஏமாற்றிய காலிஸ் (5வது), டிவிலியர்ஸ் (6வது), ஆம்லா (12வது), ஸ்மித் (14வது) உள்ளிட்ட தென் ஆப்ரிக்க வீரர்கள் பின்தள்ளப்பட்டனர்.
ஜாகிர் அபாரம்:
பவுலர்களுக்கான ரேங்கிங்கில், இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜாகிர் கான் 4வது இடத்துக்கு முதன்முறையாக முன்னேறினார். டர்பன் டெஸ்டில் துல்லியமாக பந்துவீசியதே இதற்கு முக்கிய காரணம். சுழலில் அசத்திய ஹர்பஜன் சிங், இரண்டு இடங்கள் முன்னேறி 8வது இடம் பிடித்தார். வேகத்தில் நம்பிக்கை அளித்த ஸ்ரீசாந்த் 6 இடங்கள் முன்னேறி 27வது இடம் பிடித்தார். முதலிடத்தில் தென் ஆப்ரிக்காவின் ஸ்டைன் நீடிக்கிறார்.

Add Comment