காஸாவிற்கு மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் சென்ற கப்பல்களை தாக்கி 18 பேரை கொன்று இஸ்ரேல் நாசகரம்

காஸாவிற்கு மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் சென்ற கப்பல்களை தாக்கி 18 பேரை கொன்று இஸ்ரேல் நாசகரம்

இஸ்ரேலினால் சுற்றி வளைக்கப்பட்டு முற்றுகையிடப்பட்டிருக்கும் பாலஸ்தீனத்தின் காஸா பகுதியின் முற்றுகையை முறியடித்து அங்கு வாழும் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை சுமந்து வந்த கப்பல்களை மனிதாபிமானமற்ற இஸ்ரேல் கடற்படை தாக்கியது. இந்த கப்பல்களில் பயணம் செய்த 19 அமைதி போராளிகள் உயிர் இழந்தனர். 12க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

பிரிட்டன், அயர்லாந்து, அல்ஜீரியா, குவைத், கிரீஸ் மற்றும் துருக்கி நாடுகளைச் சேர்ந்த ஆறு கப்பல்களைக் கொண்ட இந்த விடுதலை கப்பல் குழுமத்தில் 50 நாடுகளைச் சேர்ந்த 700 அமைதியாளர்கள் பயணித்தனர். பாலஸ்தீனத்தின் ஆதராவளர்கள், நோபிள் பரிசு பெற்றவர்கள், பல்வேறு ஐரோப்பா நாடுகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த கப்பல்களில் பயணித்தனர். காஸா மீது இஸ்ரேல் Levitra No Prescription போட்டுள்ள தடையை முறியடிக்கும் நோக்கத்துடன் இந்த கப்பல் குழு பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சைப்பிரஸில் உள்ள துறைமுகம் ஒன்றிலிருந்து கடந்த ஞாயிறு (மே 30) புறப்பட்ட இந்த கப்பல் குழுமம் மறுநாள் பாலஸ்தீனத்தை அடைய இருந்தது.

Add Comment