மைக்கேல் கிளார்க் புதிய கேப்டன்: பாண்டிங் பரிதாபம்

காயம் காரணமாக ஆஷஸ் டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியிலிருந்து விலகியுள்ளார் ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங். இதனையடுத்து இப்போட்டியின் கேப்டனாக மைக்கேல் கிளார்க் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. முதல் 4 போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து 2-1 என முன்னிலையில் உள்ளது. இத்தொடரின் ஆரம்பத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங்கிற்கு இடது கை சுட்டுவிரலில் காயம் ஏற்பட்டது. இதற்கு நேற்று “எக்ஸ்ரே’ எடுத்து பார்க்கப்பட்டது. இதில், லேசான எலும்பு முறிவு ஏற்பட்டது buy Bactrim online தெரியவந்தது. இதனால் வரும் ஜன. 3 ம் தேதி சிட்னியில் துவங்க உள்ள 5 வது டெஸ்ட் போட்டியிலிருந்து பாண்டிங் விலகியுள்ளார். காயம் குணமாக இன்னும் ஒரு மாதமாகும் என்பதால், உலககோப்பை தொடரில் தான் பாண்டிங் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து பாண்டிங் கூறுகையில்,”” கைவிரல் காயம் காரணமாக ஓய்வு தேவைப்படுகிறது. விரைவில் காயத்திலிருந்து மீள்வேன். ஓய்வு பெறும் எண்ணம் தற்போதைக்கு இல்லை,” என்றார்.
கிளார்க் கேப்டன்:
பாண்டிங் இல்லாத நிலையில், கேப்டன் பொறுப்பு மைக்கேல் கிளார்க்கிற்கு வழங்கப்பட்டுள்ளது. துணைக் கேப்டனாக பிராட் ஹாடின் நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் வம்சாவளி வீரரான உஸ்மான் கவாஜா அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.
சிட்னி டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி:
மைக்கேல் கிளார்க் (கேப்டன்), பிராட் ஹாடின் (துணை கேப்டன்), வாட்சன், ஹியுஸ், உஸ்மான் கவாஜா, மைக்கேல் ஹசி, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஜான்சன், பீட்டர் சிடில், பென் ஹில்பெனாஸ், போலிஞ்சர், மைக்கேல் பியர்.

Add Comment