வறண்டபூமியும் உலர்ந்துபோன உடலும்…

வானமே உன்னைப் படைத்தவன்
உயரத்தில் அல்லவா வைத்திருக்கிறான்
உயரத்தில் இருப்பதால் இடியென்ற பெயரில்
இருமிக்கொண்டு அலையாதே இருமாப்புக்கொண்டு நீ..
உமிழ்ந்துவிடு உன்னில் அடக்கிக்கொண்ட அடை மழையை
கருமேகத்தை கண்ணில்காட்டி மிரட்டுகிறாய் எங்களை
காத்திருக்க வைத்துவிட்டு கடந்துபோகிறாய் எம் மாநிலத்தை
இங்கே விளை நிலங்களெல்லாம்
வெடித்து நிர்க்கெதியாய் நீரின்றி தவிக்கையில்
வேரெங்கோ விரண்டோடும் வெள்ளத்தால் உயிரையும்
உடமையையுமல்லவா உருண்டோடச் செய்கிறாய்
வடக்கிலே வழமைகாட்டி தெற்கிலே எங்களை
தினறவைக்கிறாயே நீரின்றி நாங்கள் திண்டாடட்டும் என்றா…?
காரோட ரோடுபோட்ட கட்சிக்கார அரசர்கள்
நீரோட ஓடைபோடத் தவறுவதேன் எம் தேசத்தில்
காஷ்மீர் முதல் கன்னியாவரை தார்போட்ட தனவான்கள்
தேசியம் செழிக்க நீரோடை செய்யத் தயங்குவதேன்;
Ampicillin online style=”text-align: justify;”>நீரின்றி வாடும் நிலங்களெல்லாம் தேசமெங்கும்
நின்மதியாய் நிலம் செழிக்கும் நிலைவருமே என்றா…?
கங்கையிலும் யமுனையிலும் கோதா வரியிலும்
கரைபுரண்டு கலங்க வைக்கும் பிரம புத்திராவிலும்
வருகின்ற கனமழை வெள்ளங்கள் கடலிலே கலப்பதால்
கவலைப்படுவது எங்களின் இதயமும் காய்ந்து போன வயிறும்
உலர்ந்து போன உடலும் கடன்பட்ட நிலமும் அல்லவா…?
கடனாளியாய் கயிர்கொண்டு கழுத்தில் மாட்டி
மாண்டுபோகும் மாந்தரை மறந்ததென்ன ஆளுபவர்கள்
விளை நிலங்களெல்லாம் விற்கப்பட்டு வீடாகும்போது
காடுகளெல்லாம் கண்கலங்குவதை காண்பார் யார்…?
கானல்நீராய் கண்களுக்கு மழைமேகத்தைக் காட்டிவிட்டு
மாயமாகிப்போவதால் மாண்டல்லவா போகிறோம்…?
வின்னிலே உலவுகிற கோளங்களை காண வேண்டி
வேடிக்கையாய் கோடிகள் ஆயிரம் கொட்டுகிற முடிவினை மாற்றி
மண்ணிலே உலவுகிற உயிரினைக் காப்பாற்ற வேண்டி
தேசமெங்கும் வீனாகும் மழை நீர் அனைத்தையும்
தேசிய நீரோடையொன்றில் சங்கமித்தால் தேசமட்டுமா செழிக்கும்
எங்களின் வரண்ட பூமியும் உலர்ந்த தேகமும் அல்லவா செழிக்கும்
இதை உணர்பவர்களா இல்லையே உயரப்பறப்பவர்கள்…?
-செங்கோட்டையன்

Add Comment