அமெரிக்காவில் சாதனைப் படைத்த தமிழக சிறுவன்

3அமெரிக்காவில் சாதனைப் படைத்த தமிழக சிறுவன்

மைக்ரோஃசாப்ட் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப வல்லுநர் தேர்வில் 9 வயதே ஆன தமிழகத்தைச் சேர்ந்த பிரணவ் கல்யாண் என்ற மாணவர் வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கிறார்.

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஏ.எஸ்.பி. டாட். நெட் பிரிவில் (ASP.NET), அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப வல்லுநருக்கான தேர்வை கடந்த 12ம் திகதி நடத்தியிருந்தது.

கம்ப்யூட்டர் பட்டதாரிகள்தான் பொதுவாக இத்தேர்வை எழுதுவது வழக்கம். ஆனால் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் buy Ampicillin online 4ம் வகுப்புப் படிக்கக் கூடிய 9 வயதே ஆன பிரணவ் கல்யாணும் தேர்வு எழுத அனுமதி கிடைத்தது.

இத்தேர்வு எழுதியதுடன் மட்டுமின்றி சிறுவன் பிரணவ் வெற்றியும் பெற்று சாதனை படைத்துள்ளார். சாதனை நாயகனான பிரணவ்-ன் தந்தை கல்யாண், தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுக்குப் புகழ்பெற்ற பாலமேட்டைச் சேர்ந்தவர்.

இவர் கலிபோர்னியாவில் அமெரிக்க வங்கியில் பணியாற்றி வருகிறார். பிரணவ்வின் தாயார் விசாலாட்சியும் அமெரிக்க வங்கியில் நிதி ஆய்வாளராக பணியாற்றுகிறார்.

பிரணவ்வின் இந்த சாதனைக்கு அவரது குடும்ப நண்பர்களான மணிவண்ணன், நதியா, சதீஷ் உள்ளிட்டோர்தான் உந்துசக்தியாக இருந்துள்ளனர் என்று அவரது பெற்றோர் பெருமைப்படுகின்றனர்.

Add Comment