படுத்துறங்க வேற எடமில்ல.!

maa

படுத்துறங்க வேற
எடமில்ல.!
பேச்சுத்துணைக்கும்
யாருமில்ல.!

பள்ளிக்கூடம் அனுப்ப அம்மாகிட்ட
பணமில்ல.!
எப்ப கிடைக்கும் – என் பசிக்கு உணவு
தெரியலை.!

என் அப்பன்காரன்,
அம்மாவை
விட்டுட்டு போன ஒரு
தறுத..!
அம்மா எப்ப வருமோ
புரியலை.!

தூக்கத்திலும் நல்ல கனா
வர்றதில்லை.!
ஆசைன்னு இப்போதைக்கு
எதுவுமில்ல.!

நான் அழுதா அம்மா
அணைக்கும்.!
அம்மா அழுதா எனக்கு நெஞ்சே
வலிக்கும்.!

அடிக்கிற கைதான் அணைக்கும்னு
கேட்குற வெறும் பாட்டு
போதவில்லை..
அணைக்க வேணாம்..
தெருவுல உறங்கையில
எழுப்பி அடிக்க வேணான்னு
போலிசுகாரங்ககிட்ட சொல்லுவியலான்னும் தெரியல.!

நானொன்னும் உங்களுக்கு புதுசில்லை.
நித்தமும் பாத்தாலும்,
ஏனோ இரக்கம் உங்களுக்கு
வர்றதில்லை.!

வெறும் காசை விட்டெறிஞ்சா
உங்க கடமை
முடியறதில்லை.!

அடுத்த இந்தியாவையாச்சும்
சரியாய் உருவாக்குங்குன்னு
உங்களுக்கு கட்டளை போடுற அளவுக்கும்
எனக்கு வயசில்லை.!

விடியுன்னு
நம்பிக்கை சொல்லுது.!
விடிஞ்சா Doxycycline online பார்ப்போம்னு
என் வாழ்க்கை சொல்லுது.!

– Abbas Al Azadi

Add Comment