ரெயில் நிலையங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் தெற்கு ரெயில்வே அதிரடி உத்தரவு

ரெயில் நிலையங்களில் அசுத்தம் செய்தால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அதிரடியாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

தமிழகத்தில் உள்ள ரெயில் Ampicillin No Prescription நிலையங்கள், பிளாட்பாரங்கள் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் சுத்தம் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்த ரெயில்வே நிர்வாகம் தகுந்த நடவடிக்கைகள் எடுக்க முன்வந்து உள்ளது.

இதன் காரணமாக ரெயில் நிலையங்களில் எச்சில் துப்புவது, குளிப்பது, சிறுநீர் கழித்தல், துணி துவைத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் ரெயில்வே சட்டபிரிவுபடி ரூ.500 அபராதம் விதிக்கப்படும். ரெயில்களில் போஸ்டர் ஒட்டுதல் மற்றும் சேதப்படுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடுவோர்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும். எனவே பயணிகள் ரெயில் நிலையங்களை சுத்தமாக வைத்திருக்க ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது

Add Comment